விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது. விருத்தாசலத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசி மகம், ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் போன்ற திருவிழாக்கள் விசேஷமாக நடப்பது வழக்கம். மாசி மகத்தின்போது லட்சக்கணக்கானோர் மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சுவாமியை வழிபடுவர்.
மாசிமக தேரோட்ட உற்சவத்தில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேரில், நான்குமாட வீதிகளில் உலா வருவது வழக்கம். இந்நிலையில், ஐந்து தேர்களையும் அலங்கரிக்கும் பணி துவங்கி, தீவிரமாக நடக்கிறது.