Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை ... இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் தாமோதர தீபத்திருவிழா இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுபதி காலத்து சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
சேதுபதி காலத்து சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

20 அக்
2017
11:10

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மேல அரும்பூர் பகுதி கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் குளக்கரையில், மன்னர் சேதுபதி காலத்தை சேர்ந்த இரு சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் திருவாடானை அருகே மேல அரும்பூர் கூத்தப் பெருமாள் அய்யனார் கோயிலில் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ. விமல்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்குள்ள குளக்கரையில் கல்வெட்டுடன் கூடிய சூலக்கல் இருந்தது.

வே.ராஜகுரு தெரிவித்ததாவது: மேல அரும்பூரில் இருந்த சூலக்கல், புல்லுகுடி சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் இருந்தது. 2.5 அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள கல்லின் நடுவில் திரி சூலமும், அதன் இடது, வலது புறங்களில் சூரியனும், பிறையும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. இந்தக்கல்லின் நான்கு புறத்திலும் கல்வெட்டுக்கள் காணப்பட்டன. மன்னர்கள் கோயில்களில் தினசரி வழிபாடு நடை பெறுவதற்காக விளை நிலங்களின் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி, கோயில்களுக்கு தானமாக வழங்குவார்கள்.

இந்த விளை நிலங்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்து கோயில்களில் வழிபாடு தொடர்ந்து நடை பெறும். அவ்வாறு தானமாக வழங்கிய நிலங்களின் மூலைகளில் எல்லைக்கல் நட்டு வைப்பார்கள். சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் உள்ள கல்லில் திரிசூலமும், திருமால் கோயிலுக்கு சங்கு, சக்கரம் பொறித்த கல்லும் நடுவார்கள். கி.பி.1711 முதல் கி.பி., 1725 வரை சேது நாட்டை ஆண்ட முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெயரால் விளத்துார் திருவினாபிள்ளை என்பவர் புல்லுகுடியில் உள்ள கயிலாச நாத சுவாமி கோயிலுக்கு, அரும்பூர் பகுதியில் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இதனை செப்பு பட்டயமாக மந்திரி எழுதிக்கொடுத்துள்ளார், என்ற செய்தி கல்வெட்டில் உள்ளது. கல்வெட்டில் தானமாக கொடுத்த நிலங்களின் விபரங்கள் இல்லை. சூலக்கல் உள்ள நிலம் தானமாக வழங்கப்பட்டதாக கொள்ளலாம். இதில் விகாரி தமிழ் ஆண்டு, தை மாதம் 26 ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆங்கில ஆண்டு கி.பி.1720 ஆகும். ஸ்ரீமது என தொடங்கும் இக்கல்வெட்டு, சந்திராதித்தவருக்கு, என முடிகிறது. இக்கல்வெட்டில் 32 வரிகள் உள்ளன. இரண்டு மூன்று எழுத்துக்கள் ஒரு வரியாக உள்ளது. சேதுபதிகள் காலத்தை சேர்ந்த முதல் சூலக்கல் கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது. சோழர் கால சூலக்கல் இதே போல் மேல அரும்பூர் உத்தம பாண்டீஸ்வரர் கோயில் பின்புறம் ஒன்றும், கருப்பசாமி கோயில் குளத்தில் ஒன்றுமாக இரு சூலக்கற்கள் உள்ளன. சோழர் கால கலையமைப்பில் உள்ளன. புல்லுகுடி சிவன் கோயிலுக்கு பிற்காலச் சோழர் காலத்தில் நிலதானம் வழங்கப்பட்டு, எல்லையாக சூலக்கற்கள் நடப்பட்டிருக்கலாம். இதில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar