Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: அரசு வகையில் நன்மை துலாம்: அரசு வகையில் நன்மை தனுசு: வளர்ச்சிக்கு வழியிருக்கு தனுசு: வளர்ச்சிக்கு வழியிருக்கு
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
விருச்சிகம்: திடீர் வருமானம் வருதுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:55

மற்றவரை வியப்பில் ஆழ்த்தும் விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாய் டிச.2ல்  சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் நவ.27முதல்  சுக்கிரன் சாதகமான இடத்திற்கு வருகிறார். கேதுவாலும் நற்பலன் அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சுமாரான நிலையில் உள்ளன. தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும்.  மாத தொடக்கத்தில் செவ்வாயால் செயலில் வெற்றி உண்டாகும்.  பொருளாதார வளம் சிறப்படையும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு.

குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நவ.27க்கு பிறகு பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  நவ.26,27ல்  உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் டிச.11,12,13ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். நவ. 19,20 ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். புதனால் அவ்வப்போது குடும்பத்தில்  பிரச்னை குறுக்கிடலாம்.  கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரத்தில் மாதத் தொடக்கத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். தெரியாத நபரோடு நெருங்கி பழக வேண்டாம். நவ.27க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகமும் அதிக லாபத்தை தரும். நவ. 17,18,21,22,23, டிச.14,15ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஆனால் டிச.1,2ல் எதிர் பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்கள் வருமானத்தால் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகளை  டிச.2க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். இடமாற்றத்தை காணலாம். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். டிச. 9,10 ல் எதிர்பாராமல் திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்கள் முயற்சிகளில் இருந்த தடை, பொருள் நஷ்டம் முதலியன நவ.27க்கு பிறகு மறையும். அதன் பிறகு ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது.  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  

அரசியல்வாதிகள், பொதுநலத்தொண்டு செய்பவர்கள் சிறப்பான பலனை காண்பர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். நவ. 28,29,30ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.  டிச.2ந் தேதிக்கு பிறகு பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால்பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்.  நண்பர்களுடன் பொழுதுபோக்கில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்வது அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.  

விவசாயிகள்  நல்ல வருவாயை காணலாம். நெல், கேழ்வரகு, சோளம்,  காய்கறி, பழவகைள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர்.வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் டிச.2க்குள் முயற்சிப்பது நன்மையளிக்கும்.  வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம் புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிக்க வேண்டியது இருக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால்  லாபத்துக்கு குறை இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.

நவ.24,25ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம்.  டிச.3,4ல் விருந்து, விழா என சென்று  வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும்.

* நல்ல நாள்: நவ.19,20,24,25, டிச.1,2,3,4,9,10,11,12,13
* கவன நாள்: டிச. 5,6  சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:
* சனியன்று சனீஸ்வரருக்கு  எள் தீபம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* சுவாதியன்று நரசிம்மருக்கு அர்ச்சனை

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.