Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: வீடு கட்டும் யோகம் மகரம்: வீடு கட்டும் யோகம் மீனம்: ஆடம்பரமா இருப்பீங்க! மீனம்: ஆடம்பரமா இருப்பீங்க!
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
கும்பம்: லாபம் அள்ளுவீங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:58

நல்லவர் கருத்தை ஏற்று நடக்கும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் நவ.27 வரை சுக்கிரன் நற்பலனை கொடுப்பார். புதன், குரு, ராகு, சூரியனால் நற்பலன் தொடரும்.  மற்ற கிரகங்கள் சுமாரான நிலையில் இருந்தாலும் பாதிப்புகள் ஏதும் நிகழாது. சமூகத்தில் செல்வாக்குக்கு எந்த குறையும் வராது.  பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். நினைத்த செயல் வெற்றிகரமாக முடியும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தி ஆகும். குடும்பத்தில் வசதி, வாய்ப்பு பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். நவ.26,27ல் சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். டிச.1,2ல் புத்தாடை,  அணிகலன்கள் வாங்கலாம். நவ.21,22,23ல் உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். டிச.3,4ல் உறவினர் வகையில் வீண் விரோதம் ஏற்படலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில்  புதுமையை  புகுத்தி நவீனமயமாக்குவீர்கள். பகைவரின்  சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி  பெறும். கடந்த கால உழைப்பின் பயனால் அமோக லாபம் கிடைக்கும்.  டிச.7,8ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். நவ.24,25,28,29,30ல் முயற்சிகளில் தடை ஏற்படலாம். புதிய முதலீட்டு விஷயத்தில் அதிக கவனம் தேவை.

பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். எதிர்பார்த்த கோரிக்கைகள்  ஒவ்வொன்றாக நிறைவேறும். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். நவ.19,20ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். உங்கள் அதிகாரம் கொடிக்கட்டி பறக்கும்.

கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் எளிதாக கையெழுத்தாகும். நவ.27க்கு பிறகு எதிரியால் தொல்லை உண்டாகும். மறைமுகப் போட்டி குறுக்கிடும். சிலருக்கு அவப்பெயர் உண்டாகவும் வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். தொண்டர் நலனில் அக்கறை செலுத்துவர். அரசியல்ரீதியான தொலைதூர பயணம் மேற்கொள்வர்.

மாணவர்கள்  கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். பெற்றோர் பெருமைப்படும் விதத்தில் நற்செயலில் ஈடுபடுவர். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் பெறுவர். நெல், கோதுமை சோளம் மற்றும் பழ வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது. அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் பயிர் செய்வது நல்லது.  புது சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும்.

பெண்களுக்கு குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. உங்களின் நற்செயலால் குடும்பத்தினருக்கு பெருமை உண்டாகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட, உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையாக இருப்பர். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். டிச.9,10ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம்.

* நல்ல நாள்: நவ.19,20,21,22,23, 26,27 டிச.1,2,7,8,9,10
* கவன நாள்: டிச. 11,12,13 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 2,3,5  நிறம்: மஞ்சள், சிவப்பு

* பரிகாரம்:
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் விளக்கு
* செவ்வாயன்று முருகன் கோயிலில் விளக்கு
* வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.