மனிதர்களின் வாழ்க்கையில் இரவு பகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. ஆனால், மனத்தை ஒரு போதும் தடுமாற விடக்கூடாது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் நல்லதையே சிந்திக்க வேண்டும். அதற்கான நல்லறிவை தரும் ஞானபண்டிதனாக, முருகன் பழநியில் அருள்பாலிக்கிறார். பகைவனுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவர் அவர். அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானவர் என்று தலபுராணம் கூறுகிறது. ஆனால், தத்துவரீதியாக இவ்விஷயம் இப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல், நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டிருக்கிறார். அதனால் தான் பழநி சென்று வழிபடுபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். தைப்பூச நன்னாளில் தண்டாயுத பாணியை சரணடைந்து இந்த பிறவிக்கு தேவையான செல்வமும், வாழ்வுக்கு பிறகு அவனது கந்தலோகத்தில் வாழும் பாக்கியமும் பெறுவோம்.