கோயிலில் சிவ தரிசனத்திற்கு அனுமதி அளிப்பவர் நந்தீஸ்வரர். இவருக்கு ரிஷபதேவர், நந்திகேஸ்வரர் என பெயருண்டு. இவர் சிவஆகமங்களை உலகிற்கு வழங்கினார். அடியவர்களுக்கு காட்சி தரும்போது சிவபார்வதி நந்தீஸ்வரர் மீது சிவனும், பார்வதியும் எழுந்தருள்வர். எப்போதும் சிவ தியானத்தில் ஆழ்ந்த இவர், தர்மத்தின் வடிவமாக கருதப்படுகிறார். இவரது இரு கொம்புக்கு இடையே சிவன் நடனமாடுவதாக ஐதீகம். வெள்ளை உள்ளம் படைத்த இவரை சிவராத்திரியன்று வழிபட்டால் வரங்களை வழங்குவார்.