தமிழகத்தில் சூரியனுக்காக அமைந்த ஒரே கோயில் சூரியனார் கோயில். முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதால், சுவாமிக்கு, ‘குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலய தேவர்’ என்று பெயர். சூரிய நாராயணருடன் உஷா, பிரத்யுஷா என்னும் தேவியர் உள்ளனர். சன்னதியை சுற்றி மற்ற பரிவார தெய்வங்களாக எட்டு கிரகங்கள் உள்ளன. சுப கிரகமான குருபகவானின் சன்னதி, சூரியனுக்கு எதிரில் உள்ளது. குரு தன் சுப பார்வையால் சூரியனின் உக்கிரத்தை போக்கி குளிர்விக்கிறார்.