Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திராட்டதி, ... ரிஷபம்:  (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வாழ்க்கை ஒரு சவால்... சமாளியுங்க! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) கல்யாண மாலை சூடும் வேளை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) கல்யாண மாலை சூடும் வேளை

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
05:04

நல்ல எண்ணத்துடன்  செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

ராசிக்கு 7-ம் இடமான துலாம் ராசியில் குருபகவான் இருப்பது உயர்வான நிலை. குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூக செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அக்.10ல் 8-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறிய பின் அவரால் நன்மை தர இயலாது. இருந்தாலும் 7-ம் இடத்து பார்வையால் ஓரளவு நற்பலனை எதிர்பார்க்கலாம். 2019 பிப்.10ல் 9-ம் இடமான தனுசு ராசிக்கு மாறுவதால் சுபபலன் அதிகரிக்கும்.

ராகு 4-ம் இடமான கடகத்தில் இருப்பதால் பிரச்னை உருவாகலாம். 2019 பிப்.13ல் இடம் பெயர்ந்து மிதுனத்திற்கு வந்த பின், பொருளாதார வளம் மேம்படும்.

கேது 10-ம் இடமான மகரத்தில் இருப்பது சிறப்பானதல்ல. அவரால் உஷ்ணம், தோல் தொடர்பான உபாதை வரலாம். எதிரி தொல்லை ஏற்படலாம். 2019 பிப்.13ல் 9-ம் இடமான தனுசு ராசிக்கு மாறிய பின்னும் நன்மை தர மாட்டார்.

சனிபகவான் தனுசு ராசியில் இருப்பதால் முயற்சியில் தடை வரலாம். அவர்  சாதகமற்று இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். 2018 ஏப்.28  முதல் செப்.11 வரை வக்ரம் அடையும் காலத்தில் நற்பலன் உண்டாகும்.

2018 ஏப்ரல் –  செப்டம்பர் குருவால் செல்வாக்கு மேம்படும். வருமானம் உயரும். கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சி இனிதே கைகூடும். புதிய வீடு,மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.  கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் சனியால் பொறுப்பு அதிகரித்தாலும் அதற்கான வருமானம் கிடைக்காமல் போகாது. வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் செய்யலாம். சனிபகவானின் 10-ம் இடத்து பார்வையால் பணப்புழக்கம் கூடும்.

பணியாளர்களுக்கு  தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். போலீஸ், பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு தேக்க நிலை மாறும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வர்.  விவசாயிகள் விடாமுயற்சியால் புதிய சொத்து வாங்குவர்.  கால்நடை வளர்ப்பில் வருமானம் கூடும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.   

2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் குருபகவான்  ராசிக்கு 8-ம் இடத்தில் இருக்கிறார். மற்ற கிரகங்களும் சாதகமாக இல்லை.  ஆனால் குருவின் 7-ம் இடத்துப் பார்வையால்  ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம். விடாமுயற்சி இருந்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். சமூக மதிப்பு சுமாராக இருக்கும். நவம்பர், டிசம்பர் மாதத்தில் புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு. 2019 பிப்.13க்கு பிறகு ராகுவால் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  பிப்.13க்கு பிறகு கேதுவால் சிறு தடைகள் குறுக்கிடலாம்.

2019 பிப். 10ல் குருபகவான் தனுசு ராசிக்கு மாறுவதால் மனதில் உற்சாகம் பிறக்கும்.  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். 2019 பிப்.13க்கு பிறகு  அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறும்.  

வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். 2019 பிப். 13க்கு பிறகு தொழில் வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை முயற்சியின் பேரில் பெறலாம். 2019 பிப்.13க்கு பிறகு அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர்.  மாணவர்கள்  பிப். 13க்கு பிறகு கல்வியில் வளர்ச்சியடைவர். விவசாயத்தில்  அதிக முதலீடு செய்ய வேண்டாம். பிப்.13 க்கு பிறகு எதிர் பார்த்த மகசூல் கிடைக்கும். நவீன இயந்திரம் வாங்க வாய்ப்புண்டு.
பெண்களுக்கு குடும்பத்தேவை நிறைவேறும்.  

பரிகாரம்:

* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
* பிரதோஷத்தன்று மாலை நந்தீஸ்வரர் வழிபாடு
* சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு நெய் தீபம்

பகிர்க copied
 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: யோக காலம்தைரிய காரகனான செவ்வாய், ஞானகாரகனாக கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சுஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம்: உழைப்பால் உயர்வுபொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar