Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று நவராத்திரி இரண்டாம் நாள். ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்று வினோத வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்று வினோத வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2026
10:10

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத வழிபாடு நடந்தது.


கமுதி அருகே முதல்நாடு கண்மாய் கரையில் எல்லைபிடாரி அம்மன் பீடம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத திருவிழா நடக்கிறது.பல ஆண்டுகளுக்கு முன் 5 ஆண்களுடன் பிறந்த பெண் ஒருவர் அண்ணியார்களால் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தவர் மாயமானார்.முதல்நாடு கிராமமக்களின் கனவில் தோன்றி ஊர் எல்லையில் இருந்து தெய்வமாக காப்பாற்றுவேன் எனவும், ஆண்கள் மட்டும் ஆண்டுக்கு ஒரு நாள் ஆடுகளை பலியிட்டு வழிபாடு செய்ய வேண்டும் எனவும், பெண்கள் வரக்கூடாது எனவும் கூறியுள்ளார். இந்தாண்டு புரட்டாசி மாதத்தில் வழிபாடு தேதி அறிவித்ததில் இருந்து பீடம் அமைந்த பகுதிக்கு பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. திருவிழாக்காக அனைத்து வீடுகளிலும் அரிசி,பணம் வசூலித்து பூஜை நடத்தப்பட்டது.நேற்று முன்தினம் இரவு எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு கைகுத்தல் பச்சரிசி சாதம் உருண்டை செய்து 100 ஆடுகளை பலியிட்டு படையல் இடப்பட்டது. பின் அம்மனுக்கு சிறப்புபூஜை நடந்தது. பனை ஓலையால் செய்த மட்டையில் உணவு பரிமாறப்பட்டது.இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு,விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தையும் குழிதோண்டி புதைக்கப்பட்டது.இவ்விழாவில் கமுதி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar