பிரம்மாண்ட கொலுவுடன் காஞ்சி ஒரிக்கையில் நவராத்திரி விழா துவக்கம்: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2026 01:10
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி மணிமண்டபத்தில், பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளின் முன்னிலையில் இந்த ஆண்டு நவராத்திரி மஹோற்சவம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
தவவாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் காஞ்சிப்பெரியவர். காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியாக இருந்த இவர், நாடு முழுவதும் பாதயாத்திரை சென்று ஆன்மிகம் பரப்பிய அருளாளர். காஞ்சிபுரம் அருகிலுள்ள ஒரிக்கை கிராமத்தில் இவரது நினைவாக மணிமண்டபம் உள்ளது. இக்கோவிலில் நேற்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நவராத்திரி மஹோற்சவம் துவங்கியது. யாகசாலை பூஜையுடன் துவங்கி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இங்கு ஒரு பிரம்மாண்டமான நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. இன்று நவராத்திரி இரண்டாம் நாள் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.