திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் இருநூறு ஆண்டுகள் பழமையான அனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவருடன், தட்சிணாமூர்த்தி, பால முருகன், நவக்கிரகம் மற்றும் கோயில் வளாகத்தில் மிக பெரிய நந்தி உள்ளது. இந்தக் கோயிலின் முன் உள்ள நந்தீஸ்வரர் வருடத்துக்கு ஒருமுறை பங்குனி மாதம் மூன்றாம் நாள் அன்று மட்டும் சில நிமிடங்கள் தங்க நிறமாக மாறும் அதிசய தரிசனத்தை பல லட்சம் மக்கள் தரிசித்து வருகின்றனர். இந்த அதிசய நிகழ்வு முதன்முதலாக கடந்த 2012 ஆம் ஆண்டு பங்குனி மாதம் மாதம் மூன்றாம் தேதி பிரதோஷ வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது திடீரென சூரிய ஒளி ராஜகோபுரத்தின் மீது பட்டு பிறகு நந்தியின் மீது அந்த சூரிய ஒளி பட்டதும் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிந்து காட்சியளித்தார். இந்த அதிசய நிகழ்வுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டு பங்குனி மாதம் மூன்றாம் நாள் பக்தர்கள் செங்கம் ரிஷபேஷ்வரர் கோயிலில் திரண்டு நந்தி பகவானின் அருளைப் பெற்று மகிழ்கின்றனர்.