ஸ்ரீவி., கிருஷ்ணன் கோயில் தெப்பக்குளம் ரூ.2.25 கோடியில் சீரமைக்க முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2025 11:01
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமாக அத்திகுளம் ரோட்டில் உள்ள கிருஷ்ணன்கோயிலின் தெப்பக்குளத்தை ரூ. 2.25 கோடியில் சீரமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆண்டாள்கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட கிருஷ்ணன் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவத்தின் ஏழாம் நாளில் சயனசேவை திருவிழா நடப்பது வழக்கம். இக்கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வராத நிலையில் தினமும் கோயில் பட்டர்கள் பூஜை வழிபாடுகள் செய்து வருகின்றனர். தற்போது ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் முன்பு உள்ள தெப்பக்குளம் பல ஆண்டுகளாக சிதைந்து கழிவுகள் தேங்கி காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ரூ.2. 25 கோடி செலவில் இந்த குளத்தை சீரமைக்க ஆண்டாள் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.