Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாபாரதம் பகுதி-102 மகாபாரதம் பகுதி-104
முதல் பக்கம் » இதிகாசங்கள் » மகாபாரதம்
மகாபாரதம் பகுதி-103
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2018
02:05

சகுனி இம்முறை பெரும் போராட்டத்தில் இறங்கினான். பீமனுக்கும் சகுனியைச் சுற்றி நின்ற படைகளுக்கும் இடையே யுத்தம் நடந்தது. பீமன் வழக்கம் போல் அவர்களைக் கொன்று குவித்தான். துரியோதனனுக்கு பயம் அதிகரித்தது. ஆனால், சகுனி சற்றும் தைரியம் குறையாமல், மருமகனே! கவலை கொள்ளாதே. ஒட்டுமொத்த சேனையையும் இங்கே திருப்பு. நாம் பீமனைக் கொன்று விடலாம், என்று கொக்கரித்தான். அப்போது சகாதேவன் வேகமாக வந்து, சகுனியின் மீது அம்பொன்றை எய்தான். ஆனால், துரியோதனன் சகாதேவன் மீது வேல் ஒன்றை எறியவே, அவன் மயங்கி விழுந்தான். இப்படியாக கடைசிநாள் போரும் விடாப்பிடியாக தொடர்ந்தது. ஒரு வழியாக பாண்டவர்களின் கை ஓங்க, கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன் போன்ற மாவீரர்களெல்லாம் ஒடுங்கிப் போனார்கள். சகுனி மட்டும் மிகத்தீவிரமாக போரிட்டான். அவனை அழிப்பது தன் வேலை என சகாதேவன் சபதம் செய்திருந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த அவன், கண்ணபிரானால் தனக்கு தரப்பட்ட வேலை எடுத்து சகுனி மீது எறிந்தான்.

அது அவனது சபதத்தை நிறைவேற்றியது. அந்தக் கொடுமைக்காரனின் வாழ்வை அந்த வேலாயுதம் முடித்துவிட்டது. இவ்வளவு பெரிய போர்... வரலாற்றில் இன்றும் பேசப்படும் போர், லட்சக்கணக்கான உயிர்களைக் கொள்ளை கொண்ட போர் நடக்க காரணமானவனும், அண்ணன், தம்பிகளைப் பிரித்தவனுமான சகுனியின் வாழ்வு முடிந்தது பாண்டவர்களுக்கு பெரும் ஆனந்தத்தை இழந்தது. தாய்மாமனைப் பறிகொடுத்த துரியோதனன் வேரற்ற மரம் போல் ஆனான். இனி தன்னைக் காக்க வல்லவர் யாரும் இல்லை என்பது அவனுக்கே தெரிந்து விட்டது.

அப்போது அவனுக்குள் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. அவன் முகம் மலர்ந்தான். ஆம்... ஆம்... சஞ்சிவினி மந்திரத்தைப் பயன்படுத்த இதுவே சரியான நேரம். இந்த மந்திரத்தின் துணையுடன் இறந்து போன என் படைகளை அனுப்பிவிட்டால் மீண்டும் முழுபலத்துடன் அவர்களுடன் மோதலாம். அசுரகுருவான சுக்ராச்சாரி யாருக்கு மட்டுமே தெரிந்த இந்த மந்திரத்தை கசன் என்ற சீடன் மூலம் தேவகுரு பிரகஸ்பதி கற்றார். அதை அவர் மற்ற முனிவர்களுக்கு சொல்லித் தந்தார். அதில் ஒரு முனிவர் மூலம் நான் கேட்டறிந்தேன். அதை இப்போது பயன்படுத்தினால் என்ன! அவன் தனக்குள் ளேயே சொல்லிக்கொண்டான். தன் கிரீடத்தை கழற்றிவிட்டு, கதாயுதத்துடன் மட்டும்  ஒரு தடாகத்தை நோக்கி அவன் சன்றான். நீருக்குள் மூழ்கி, மூச்சையும் மனதையும் அடக்கி சஞ்சிவினி மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். அப்போது சஞ்சய முனிவர் அங்கு வந்தார். அவர் மூலமாக, துரியோதனன் நீருக்குள் மறைந் திருக்கும் விபரத்தை கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன் ஆகியோர் அறிந்தனர். அவர்கள் துரியோதனனுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேசி வெளியே வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அஸ்வத்தாமன் அவனிடம், இன்றே நான் நம் பகைவர்களை ஒழிப்பேன். அவ்வாறு செய்யாவிட்டால் இன்றுமுதல் நிச்சயம் நான் வில்லைத் தொடமாட்டேன், நான் துரோணரின் புத்திரனும் இல்லை, என்று ஆவேசமாகப் பேசினான். கிருபரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். துரியோதனன் வருவதாகத் தெரியவில்லை.

இந்த விஷயம் பீமன் மூலமாக கிருஷ்ணருக்கு தெரிய வந்தது. அவர் பாண்டவர்களிடம், துரியோதனனின் இந்த மந்திரம் இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்யும். பின்னர் அவன் தீவிரமாக போரிட சிந்தித்திருக் கிறான் என்று எண்ணுகிறேன், என்றார். இதுகேட்ட பீமன் ஆவேசமாக அந்தப் பொய்கைக்குச் சென்றான். அவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் குளக்கரையில் நின்று பேசினான். துரியோதனா! சுத்தவீரன் எவனாவது தண்ணீரில் போய் மறைந்து கொள்வானா? நீ கோழை என்பதற்கு இதை விட என்ன உதாரணம் இருக்க முடியும்? நீ எங்கு போய் ஒழிந்தாலும் சரி...என் கையால் தான் உனக்கு அழிவு. உன் தலையை எடுப்பேன். தேவலோகத்துக்கு அனுப்புவேன். அங்கே உன் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல தேவமாதர்கள் காத்திருக்கிறார்கள். இப்படி ஒளிந்து கொள்ளும் நீயா, இந்த பூமியை அரசாள ஆசைப்படுகிறாய். கோழைகளுக்கு ஏனடா நாடு? இப்போது நான் ஆக்னேயாஸ்திரத்தை விடுவேன். அது இந்த தடாகத்திலுள்ள தண்ணீரை அப்படியே உறிஞ்சிவிடும். உன்னைக் கொல்வேன், என்றான். இதுகேட்டு உள்ளிருந்த துரியோதனனுக்கு உணர்ச்சி கிளர்ந்து ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்துவிட்டது.

அவன் மந்திரம் ஜெபிப்பதை விட்டுவிட்டு, தண்ணீருக்குள் இருந்து ஆவேசமாக வெளியே வந்தான். துரியோதனனின் கையில் இருந்த கதாயுதம் கண்ட பீமன், தானும் கதாயுதத்தால் மட்டும் போர் செய்ய முடிவெடுத்தனர். அந்நேரத்தில், தீர்த்த யாத்திரை சென்றிருந்த கிருஷ்ணரின் அண்ணன் பலராமனும், துரியோதனின் சித்தப்பா விதுரரும் அங்கே வந்தனர். இருதரப்பாரும் அவர்களை வரவேற்றனர்.அவர்கள் தங்கள் தீர்த்த யாத்திரை குறித்த விபரங்களை அங்கிருந்தோரிடம் எடுத்துக் கூறினர். அவர்கள் அதுகேட்டு மகிழ்ந்து, அவர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர், கண்ணபரமாத்மா அவர்களிடம் 18 நாட்களாக நடந்து வந்த போரைப் பற்றி விவரித்தார். பின்னர், பீமனும், துரியோதனனும் போர் செய்ய தகுந்த இடம் ஒன்றைத் தேர்வு செய்து தரும்படி பலராமனிடம் கிருஷ்ணர் கேட்டார். கிருஷ்ணரே இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என பலராமன் கூற, பரசுராமரால் கொல்லப் பட்ட அரசர்களின் ரத்தம் நிறைந்த இடமான ஸ்யமந்த பஞ்சகம் என்னும் இடத்தை கிருஷ்ணர் தேர்வு செய்தார்.

உடனடியாக தன் தம்பிமார் நால்வரும் புடைசூழ படையினருடன் தர்மர் ஸ்யமந்த பஞ்சகம் புறப்பட்டார். துரியோதனனோ, அத்தனை தம்பிகளையும் இழந்து விட்ட நிலையில் தனித்து கிளம்பினான். தம்பியரோடு செல்லும் தர்மரை ஏக்கத்துடன் பார்த்தான். தர்மர் அதைக் கவனித்து விட்டார். தன் தேரை விட்டு இறங்கி, துரியோதனனிடம் சென்றார். என் அன்புத்தம்பியே, என ஆரம்பித்தார்.

 
மேலும் இதிகாசங்கள் மகாபாரதம் »
temple news

மகாபாரதம் பகுதி-1 நவம்பர் 08,2010

கதைக்குள் செல்லும் முன்... மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், ... மேலும்
 
temple news

மகாபாரதம் பகுதி-2 நவம்பர் 13,2010

நஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். ... மேலும்
 
temple news

மகாபாரதம் பகுதி-3 நவம்பர் 13,2010

வந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்!அப்பா! தாங்கள் அழ ... மேலும்
 
temple news

மகாபாரதம் பகுதி-4 நவம்பர் 13,2010

கங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே! நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று ... மேலும்
 
temple news

மகாபாரதம் பகுதி-5 நவம்பர் 13,2010

மன்னா! கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar