சென்னை திண்டிவனம் சாலையில், மாமண்டூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது வடபாதிமங்கலம், இங்கு மூலஸ்தானத்தில் பத்ம பீடத்தில் தட்சிணாமூர்த்தியின் வடிவாக பூமாத்தம்மன் காட்சி தருகிறாள். கால சர்ப்ப தோஷங்கள் நீங்கிட வெள்ளி, செவ்வாய், பவுர்ணமி நாட்களில் இங்குள்ள அஷ்ட நாகங்களுக்கு தீபங்கள் ஏற்றி, பூமாத்தம்மன் தாலாட்டுப்பாடி அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் புத்திர பாக்கியமும் உண்டாகும் என்கிறார்கள்.