பூலோக வைகுண்டத்தில் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2025 10:01
திருச்சி; பூலோக வைகுண்டமான திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில், டிச., 30ல் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. மறுநாள், 31ம் தேதி முதல் ஜன., 9 வரை பகல்பத்து உற்சவம் நடைபெற்றது. 10ம் தேதி அதிகாலை 5:15 மணிக்கு, முக்கியமான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அன்று முதல் 10 நாட்கள் நடைபெற்ற ராப்பத்து உற்சவத்தில், நம்பெருமாள் கைத்தல சேவை, வேடுபறி உற்சவம் மற்றும் நம்பெருமாள் தீர்த்தவாரி வைபவமும் நடைபெற்றது. தொடர்ந்து, ஒன்பது நாட்கள் திறக்கப்பட்ட சொர்க்கவாசல், நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் மூடப்பட்டது. நேற்று காலை, ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் நிகழ்வு நடந்தது. இதையடுத்து, காலை 10:30 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்ததும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவுற்றது.