பதிவு செய்த நாள்
21
ஜன
2025
10:01
கோத்தகிரி; நீலகிரியில் படுகர் கிராமங்களில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழா நேற்று நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்பட்டது. விரதம் இருந்த செங்கோல் பக்தர்கள், பாரம்பரிய உடை அணிந்து, வண்ணக்குடைகளின் கீழ், செங்கோல் ஏந்தி, மடிமனைக்கு அம்மனை அழைத்துச் சென்றனர். ஒரு வாரம், பக்கர்கள் வீட்டிற்கு வராமல் அங்கேயே தங்கி விரதம் இருந்து, அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ஆயிரக்கணக்கான பக்கர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர். ஹெத்தையம்மன் திருவிழா நடந்த பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், சின்னக்குன்னூர், எப்பநாடு மற்றும் பெப்பேன் கிராம பக்தர்கள் மடிமனையில் இருந்து, கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு அம்மனை அழைத்து சென்றனர். அங்கு, அருள் வாக்கு, அன்தானம், ஆடல் பாடல் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரு வாரம் நடந்த விழா நேற்று நிறைவடைந்தது. வரும் திங்கள் கிழமை மறு அணா (மறு காணிக்கை) நிகழ்ச்சி நடக்கிறது.