பதிவு செய்த நாள்
21
ஜன
2025
10:01
சிவகங்கை; நாட்டரசன்கோட்டை காமாட்சி அம்மன், பெரிய கருப்பண்ண சுவாமிகோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. நாட்டரசன்கோட்டை காமாட்சி அம்மன், பெரிய கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வ கோயிலில் சீரமைப்பு பணி செய்து, கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர். ஜன.,17 அன்று காலை 5:15 மணிக்கு அனுக்கை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜை துவங்கியது. பூர்ணாஹூதி, தீபாராதனை, அன்று மாலை 6:30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. ஜன.,18ல் விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, இரவு 8:40 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நான்காம், ஐந்தாம் யாகசாலை பூஜைகளுக்கு பின் நேற்று காலை 6:00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. கோ, லட்சுமி பூஜைகளும், அதனை தொடர்ந்து காலை 8:40 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. காலை 9:15 முதல் 10:30 மணிக்குள் சிவாச்சாரியார்கள் மூலவர், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். யாகசாலைகளில் திருமறை, திருமுறை பாராயணம் பாடப்பட்டது. கும்பாபிஷேக விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.