கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வெற்றி கிடைக்க தினமும் படியுங்கள்ஓம் சித்திவிநாயகா போற்றிஓம் சிவனார் தவப்புதல்வா போற்றிஓம் முழுமுதற் பொருளே போற்றி ஓம் மூலாதார மூர்த்தியே போற்றிஓம் உமையவள் மதலாய் போற்றிஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றிஓம் மாங்கனி பெற்றாய் போற்றிஓம் அவ்வைக்கருளினாய் போற்றிஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றிஓம் சித்தி புத்தி நாதனே போற்றிஓம் பாரதம் எழுதினாய் போற்றிஓம் மோதகம் ஏற்பாய் போற்றிஓம் காவிரி தந்த கருணை போற்றிஓம் கஜமுகனை வென்றாய் போற்றி ஓம் அருகம்புல் ஏற்பாய் போற்றிஓம் அச்சினை முறித்தாய் போற்றிஓம் ஐங்கரத்து ஆண்டவா போற்றிஓம் அல்லல் அறுப்பாய் போற்றிஓம் பிரணவ சொரூபமே போற்றிஓம் வேதாந்த வித்தகனே போற்றிஓம் வாதாபி கணபதியே போற்றிஓம் சதுர்த்தி நாயகனே போற்றிஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றிஓம் இளம்பிறை சூடினோய் போற்றிஓம் தம்பிக்கு உதவினாய் போற்றிஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றிஓம் கல்லார்க்கும் எளியாய் போற்றிஓம் உற்ற துணை நீயே போற்றிஓம் குற்றம் பொறுப்பாய் போற்றிஓம் விண்ணோர் தலைவா போற்றிஓம் இருவினை தீர்ப்பாய் போற்றிஓம் அம்மையின் பிள்ளாய் போற்றிஓம் ஆதிமூல விநாயகா போற்றிஓம் துண்டி விநாயகா போற்றிஓம் கருணை செய்வாய் போற்றிஓம் வழித்துணை வருவாய் போற்றிஓம் வேதவிழுப்பொருளே போற்றிஓம் வேண்டும் வரமருளாய் போற்றிஓம் மூஞ்சூறு வாகனனே போற்றிஓம் பிள்ளைக் கடவுளே போற்றிஓம் ஆனைமுகத்தானே போற்றிஓம் ஒற்றைக்கொம்பனே போற்றிஓம் வேழமுகத்தானே போற்றிஓம் வரமருள் வள்ளலே போற்றிஓம் காலத்தை வென்றாய் போற்றிஓம் சிந்தாமணி விநாயகா போற்றி ஓம் வியாசருக்கு உதவினாய் போற்றிஓம் கயிலை சேர்ப்பிப்பாய் போற்றிஓம் திருமுறை காட்டியவனே போற்றிஓம் முத்தமிழ் வித்தக சாமியே போற்றிஓம் பெற்றோர் வலம் வந்தாய் போற்றிஓம் எருக்க மலர் ஏற்றாய் போற்றிஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றிஓம் பொல்லாப் பிள்ளையே போற்றிஓம் மாற்றுரைத்த விநாயகா போற்றிஓம் வல்லபையை மணந்தாய் போற்றிஓம் பெருவயிறு கொண்டாய் போற்றிஓம் காட்சிக்கு சாட்சியானாய் போற்றிஓம் பக்தர்க்கு அருளும் பரமனே போற்றிஓம் தாயினும் பரிந்தருள்வாய் போற்றிஓம் வன்னியிலை ஏற்பாய் போற்றிஓம் காலம் கடந்த கற்பகமே போற்றி ஓம் வெவ்வினை அறுப்பாய் போற்றிஓம் வேட்கை தணிவிப்பாய் போற்றிஓம் கண்ணுதற் கடவுளே போற்றிஓம் முருகனின் அண்ணனே போற்றிஓம் முக்திக்கு வித்தானாய் போற்றிஓம் முக்குணம் கடந்தாய் போற்றிஓம் வெயிலுகந்த விநாயகா போற்றிஓம் கோடிசூரிய ஒளியினாய் போற்றிஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றிஓம் நம்பினோர் வாழ்வே போற்றிஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றிஓம் விடலை விரும்பினாய் போற்றிஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றிஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றிஓம் புத்தியருளும் புண்ணியா போற்றிஓம் ஆபத்தில் காப்பாய் போற்றிஓம் பாவமறுப்பாய் போற்றிஓம் விகடச் சக்கர விநாயகா போற்றிஓம் விண்ணவர் தொழும் விமலா போற்றிஓம் மண்ணுயிர்க்கொரு மருந்தே போற்றிஓம் கள்ளவாரணப் பிள்ளையே போற்றிஓம் திருமுறை காட்டிய திருவே போற்றிஓம் பேழைவயிற்று பெருமானே போற்றிஓம் இருவேறு உருவ இறைவா போற்றிஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றிஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றிஓம் கரிமுகத்து எந்தாய் காப்பாய் போற்றிஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றிஓம் ஐந்தொழில் ஆற்றும் அப்பா போற்றிஓம் பாலும் தேனும் புசிப்பாய் போற்றிஓம் குணம் கடந்த குன்றமே போற்றிஓம் எண்ணும் எழுத்தும் ஆனாய் போற்றிஓம் பிறவிப்பணியை தீர்ப்பாய் போற்றிஓம் தோணியாய் வந்த துணைவா போற்றிஓம் மாலுக்கு அருளிய மதகரி போற்றிஓம் கரும்பாயிரம் கொள் கள்வா போற்றிஓம் அப்பமும் அவலும் புசித்தாய் போற்றிஓம் முப்புரி நூலணி மார்பினாய் போற்றிஓம் கருதிய செயலை முடிப்பாய் போற்றிஓம் செம்பொன் மேனி பெம்மான் போற்றிஓம் தடைகளை போக்கும் தயாபரா போற்றிஓம் சிறுகண் களிற்றுத் திருமுகா போற்றிஓம் அறுமுகச் செவ்வேள் அண்ணா போற்றிஓம் உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றிஓம் ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றிஓம் வையம் வாழ்விக்க வந்தருள் போற்றி! போற்றி!!