பதிவு செய்த நாள்
17
அக்
2018
10:10
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் ”, பஞ்சபூத தலங்களில் “அக்னி தலமாகவும்” சிறப்புடன் விளங்கும் இத்திருத்தலத்தில் 2018- ஆம் ஆண்டின் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளது 11.11.2018 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை அருள்மிகு துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி கீழ்காணும் விவரப்படி திருவிழா நடைபெறவுள்ளது. திருக்கார்த்திகை தீப பிரம்மோற்சவத்தின் தொடக்கமாக 14.11.2018 புதன்கிழமை விடியற்காலை 5.00 மணிக்குமேல் 6.15 மணிக்குள் துலா லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்
11.11.2018 மாலை அருள்மிகு துர்க்கையம்மன் - காமதேனு வாகனம்
12.11.2018 மாலை அருள்மிகு பிடாரியம்மன் -சிம்ம வாகனம்.
13.11.2018 மாலை அநுக்ஞை, விக்நேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருதசங்கிரஹணம் விநாயகர் -வெள்ளி மூஷிக வாகனம், சண்டிகேசுவரர் ரிஷப வாகனம்.
14.11.2018 காலை பஞ்சமூர்த்திகள் -வெள்ளி விமானங்கள்,
மாலை பஞ்சமூர்த்திகள் -மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனம்.
15.11.2018 காலை விநாயகர் சந்திரசேகரர் -தங்க சூரியபிரபை வாகனம்-
மாலை -பஞ்சமூர்த்திகள் - வெள்ளி இந்திர விமானங்கள்
16.11.2018 காலை விநாயகர் சந்திரசேகரர் - பூத வாகனம் -
மாலை-பஞ்சமூர்த்திகள் - சிம்ம வாகனம் - வெள்ளி அன்னவாகனம்
17.11.2018 காலை விநாயகர் சந்திரசேகரர் - நாக வாகனம் -
மாலை - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி கற்பகவிருக்ஷம் வெள்ளி காமதேனு வாகனம்,
18.11.2018 காலை விநாயகர் சந்திரசேகரர், மூஷிக வாகனம், கண்ணாடி ரிஷப வாகனம்,
மாலை - பஞ்சமூர்த்திகள்- வெள்ளி மூஷிகம், வெள்ளி மயில், வெள்ளி பெரிய ரிஷப வாகனம்.
19.11.2018 காலை விநாயகர், சந்திரசேகரர், மூஷிக வாகனம் வெள்ளி யானை - 63 நாயன்மார்கள் விமானங்கள்
மாலை - பஞ்சமூர்த்திகள் -வெள்ளி ரதம், வெள்ளி இந்திர விமானம், இதர வெள்ளி விமானங்கள்.
20.11.2018 காலை -பஞ்சமூர்த்திகள் - மஹாரதங்கள் - தேரோட்டம் - காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல்.
மாலை - பஞ்சமூர்த்திகள் - மஹா ரதத்திலிருந்து புறப்பட்டு ஆஸ்தான மண்டபம் வந்து சேருதல்.
21.11.2018 காலை - விநாயகர் சந்திரசேகரர் - குதிரை வாகனம் -
மாலை 4.30 மணிக்கு தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம்.
22.11.2018 காலை - விநாயகர், சந்திரசேகரர் - புருஷா மிருக வாகனம்-
மாலை - பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம்.
23.11.2018 காலை - அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீபம் பகல் பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி.
மாலை -பஞ்சமூர்த்திகள் - தங்க விமானங்களில் எழுந்தருளி, அர்த்தநாரீஸ்வரர் காட்சி மாலை 6.00 மணிக்கு ஜோதி விஸ்வரூப மகா தீபம்
இரவு பஞ்சமூர்த்திகள் - தங்க ரிஷப வாகனம்.
24.11.2018 இரவு 9 மணிக்கு சந்திரசேகரர் தெப்பம்
25.11.2018 அதிகாலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் கிரிவலம்
இரவு 9.00 மணிக்கு பராசக்தி அம்மன் தெப்பம்.
26.11.2018 இரவு உற்சவ விவரம் - இரவு 9.00 மணிக்கு சுப்பிரமணியர் தெப்பம்
27.11.2018 அருள்மிகு சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனம்.