ஏழு அல்லது ஒன்பது என்ற எண்ணிக்கையில் எருக்க இலைகளை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் தலையில் எருக்க இலைகளை வைத்து அதன் மீது அட்சதை, எள்ளை வைத்து கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும். தந்தை இருக்கும் இருபாலரும் எள்ளைத் தவிர்க்க வேண்டும். சுமங்கலி பெண்கள் அட்சதையோடு சிறிது மஞ்சள் பொடியை வைத்து நீராடலாம்.