சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கல் காளியம்மன் கோயிலில் 10 ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருஷாபிஷேகம் மற்றும் பூச்சொரிதல் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர்.