Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமண யோகம் உண்டாக... மகாசிவராத்திரிக்கும், குலதெய்வ வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? மகாசிவராத்திரிக்கும், குலதெய்வ ...
முதல் பக்கம் » துளிகள்
ஏகாதசி விரதங்களும் பலனும்!
எழுத்தின் அளவு:
ஏகாதசி விரதங்களும் பலனும்!

பதிவு செய்த நாள்

21 பிப்
2019
01:02

ஒரு வருடத்தில் வரும் 25 ஏகாதசிகளும் அதில் விரதம் இருப்பதால் கிட்டும் பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
2. மோட்ச - மார்கழி - சுக்ல பக்ஷ- வைகுண்டம் கிடைக்கும்.
3. ஸபலா - தை - க்ருஷ்ண பக்ஷ- பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்).
4. புத்ரதா - தை - சுக்ல பக்ஷ- புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்).
5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண பக்ஷ- அன்ன தானத்திற்கு ஏற்றது.
6. ஜயா - மாசி - சுக்ல பக்ஷ- பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்).
7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண பக்ஷ- ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரதம் இருந்த நாள்.
8. ஆமலதீ - பங்குனி - சுக்ல பக்ஷ- கோதானம் செய்ய ஏற்றது.
9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண பக்ஷ - பாபங்கள் அகலும்.
10. காமதா - சித்திரை - சுக்ல பக்ஷ- நினைத்த காரியம் நடக்கும்.

11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண பக்ஷ- ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், பாரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்).
12. மோஹினி - வைகாசி - சுக்ல பக்ஷ- பாவம் நீங்கும்.
13. அபரா - ஆனி - க்ருஷ்ண பக்ஷ- குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்.
14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல பக்ஷ - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்).
15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண பக்ஷ- நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்).
16. சயிநீ - ஆடி - சுக்ல பக்ஷ - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்).
17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண பக்ஷ - விருப்பங்கள் நிறைவேறும்.
18. புத்ரஜா - ஆவணி - சுக்ல பக்ஷ- புத்ர பாக்கியம் கிடைக்கும்.
19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண பக்ஷ - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்.
20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல பக்ஷ- பஞ்சம் நீங்கும்.

21. இந்திரா - ஐப்பசி - க்ருஷ்ண பக்ஷ - பித்ருக்கள் நற்கதி பெறுவர்.
22. பாபாங்குசா- ஐப்பசி- சுக்ல பக்ஷ - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் பாபங்கள் அகலும்.
23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண பக்ஷ - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்.
24. ப்ரபோதினி - கார்த்திகை - சுக்ல பக்ஷ - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்.
25. கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும்

எங்கும் நிறைந்த விஷ்ணுவே சகல ஜனங்களையும், ரக்ஷிக்க வேண்டி துவாதசி எனும் திதியாக மாறி கருணை செய்கிறான் என்கிறது வராக புராணம். விஷ்ணுவுக்குச் சமமான தெய்வமில்லை. துவாதசிக்கு சமமான திதியும் இல்லை என்பார்கள். எனவே துவாதசி அன்று தானம் செய்தாலும், போஜனம் செய்தாலும், பூஜை செய்தாலும் பத்து மடங்கு பலன் தரும் எனக்  கூறுகிறது பத்ம புராணம். தெரிந்தோ தெரியாமலோ செய்த நம்முடைய ஏழு ஜென்மத்து பாபங்கள் துவாதசியில் விஷ்ணுவை பூஜித்தால் போய்விடும் என்கிறது பத்ம புராணம். ஏகாதசி விரதமிருந்து துவாதசியில் துளசியுடன் கூடிய விஷ்ணு பிரசாதத்தைச் சாப்பிட்டவருக்கு கோடி ஜென்ம பாபம் போய் விடும்" என்கிறது ஸ்காந்தம். " ஏகாதசி விரதமே மோக்ஷ ஸாதனம்" துவாதசியில் விஷ்ணுவைப் பூஜிப்பவர்கள் சுகமாய் வாழ்வார்கள், முக்தியும் பெறுவார்கள் எனகிறார் சௌனகர்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar