பதிவு செய்த நாள்
02
மே
2019
12:05
திருப்போரூர்: திருப்போரூர் அருகே, பழமையான சிலைகள், நேற்று கண்டெடுக்கப்பட்டன.
திருப்போரூர் அடுத்த தையூர் கிராமம், செந்தவள்ளி அம்மன் கோவில் பின்புறம், 500 ஆண்டுகள் பழமையான, பாப்பாத்தி அம்மன் கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே இடத்தில், புதிதாக கோவில் கட்ட, அந்த கிராம மக்கள் முடிவு செய்தனர். முதற்கட்டமாக, நேற்று மாலை, அப்பகுதி மண் மேட்டை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சமன்படுத்தினர். அப்போது, பாறையில் இரும்பு மோதிய சத்தம் கேட்டது. இதையடுத்து, 3 அடி ஆழம் தோண்டிய போது, பீடத்துடன், 2.5 அடி உயரத்தில் ஒரு சிலையும், 1.5 அடி உயரத்தில் மற்றொரு சிலையும் கண்டெடுக்கப்பட்டன. உடன், பழமையான கட்டுமானத் துடன் கூடிய செங்கற்களும் வந்தன. சிலை எடுக்கப்பட்ட இடத்தில் தான் பாப்பாத்தி அம்மன் கோவில் இருந்துள்ளது. கிராமத்தினர் தெரிவித்தனர். இரு கற்ச் சிலைகளையும், கிராம மக்கள், வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.