பதிவு செய்த நாள்
02
மே
2019
12:05
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் உள்ள தட்ஷிண சீரடி சாய்பாபா கோவிலில் ஏழாம் ஆண்டு மகா உற்சவம் நேற்று நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம், கணபதி, சுதர்சன, மகாலட்சுமி ஹோமங்கள், நாராயணீயம் பாராயண நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 6.00 மணிக்கு ஆரத்தி, தொடர்ந்து நாம சங்கீர்த்தனம், டில்லி ஸ்ரீ தர்ஷீம் ராஜ் கபூர் குழுவினரின் பக்தி இன்னிசை ஆகியன நடந்தன.மதியம், 2.30 மணிக்கு நீலகிரி படுகர் வாத்தியத்துடன் நடன நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4.00 மணிக்கு சாய்பாபா வரலாறு கூறும் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. நாயக்கன்பாளையத்தில் இருந்து கோவில் வரை வந்து செல்ல வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை, சீரடி சாய்பாபா மாதேஸ்வர அறக்கட்டளை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.