Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சடையப்பர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சடையப்பர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திருக்கடையுடைய மகாதேவர்
  அம்மன்/தாயார்: சித்தாம்பிகா
  ஊர்: திருச்சென்னம்பூண்டி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  சிவாலயமான இங்கே சீதை இலங்கையில் சிறை இருந்த காட்சி, ராமாயணப் போர் இப்படிச் சில ராமாயணக் காட்சிகளும் சிற்ப வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில் திருச்சென்னம்பூண்டி-613 105, (கோயிலடி அருகில்) தஞ்சாவூர் மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் அற்புதமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் இவ்வாலயம், கி.பி.9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முதல் பராந்தகன், பல்லவர் தொள்ளாற்றெறிந்த நந்தி நிருபதொங்க வர்மன், முத்தரையர் கோ, இளங்கோ முத்தரையர் ஆகியோர் காலத்தில் கட்டப்பட்டது. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. பிரகாரத்தில் துர்க்கை, சண்டீஸ்வரர் சன்னதிகள் உள்ளன.


 
     
 
பிரார்த்தனை
    
 

பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபடுகின்றனர்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் திருக்கடையுடைய மகாதேவர், அம்மனின் பெயர் சித்தாம்பிகா. இவளது சன்னதி தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. அம்மன் தனது மேல் வலது கரத்தில் சங்கு, மேல் இடது கரத்தில் கதை தாங்கி அருள்புரிகிறாள். முன்னிரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கிறாள். இறைவனின் சன்னதி கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியின் முன் நந்தி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.இங்கு 21 கல்வெட்டுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இக்கோயிலுக்கு பொன் அளித்தோர் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது. இறைவன் சன்னதி முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது.


 
     
  தல வரலாறு:
     
 

சிவலிங்க வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் அழைக்கப்படுகிறார் என தலவரலாறு கூறுகிறது. திருக்கடைமுடி மகாதேவர் கோயில் என முன்பு அழைக்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது சடையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் மாதிரியான ஆலயம் இது எனச் சொல்லப்படுகிறது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவாலயமான இங்கே சீதை இலங்கையில் சிறை இருந்த காட்சி, ராமாயணப் போர் இப்படிச் சில ராமாயணக் காட்சிகளும் சிற்ப வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar