Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு காத்யாயனி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காத்யாயனி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காத்யாயனி அம்மன்
  ஊர்: மரத்துறை
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  காத்யாயனி அம்மன் இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கையில் கிளியும், இடக்கையில் தாமரை மலரும் தாங்கி ஐந்து தலைநாகம் குடைபிடிக்க அமர்ந்தகோலத்தில் வடதிசையில் காட்சி தருவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காத்யாயனி அம்மன் திருக்கோயில் மரத்துறை, தஞ்சாவூர்.  
   
    
 பொது தகவல்:
     
  கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் எதிரே அழகிய திருக்குளம். பிரதான வாயிலில் மூன்றுநிலை ராஜகோபுரம். உள்ளே சென்றால் எட்டுத் தூண்களைக் கொண்ட வசந்த மண்டபம் உள்ளது. தெற்குப் பிராகார திருமதிலையொட்டி மதுரை வீரன், பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, ஜடாமுனி, பாலக்காட்டு முனி, வேதமுனி, இலாடமுனி ஆகிய ஏழு முனிகளின் திருவுருவங்கள் சுதை வடிவில் காட்சி தருகின்றன. மேற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கி மூன்று பச்சையம்மன் சிலைகள் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் சங்கிலக் கருப்பன், வீரன், மாடன், நாகர் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. மகாமண்டபத்தில் பிரதான வாயிலின் தென்திசையில் விநாயகரும், வடதிசையில் பாலமுருகனும் உள்ளனர். மகா மண்டபத்திலிருந்து அர்த்த மண்டபம் செல்லும் வாயிலின் தென்திசையில் பச்சையம்மன் மற்றும் பூங்குறத்தி கதை வடிவங்களும், வடதிசையில் வள்ளித்தாய் மற்றும் குழந்தையை மடியில் அமர வைத்துள்ள காத்தாயி அம்மன் கதை வடிவங்களும் உள்ளன. அர்த்த மண்டபத்தின் தென் திசையில் நின்ற கோலத்தில் உற்சவர் காத்தாயி அம்மனும், பச்சைவாழி அம்மனும் உள்ளனர். ஏழு முனிகளைத் தவிர கஞ்சமலை ஈஸ்வரர், மதுரைவீரன், காட்டேரி கருப்பன் போன்ற தெய்வங்களும் பிற்காலத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது பயம், பிணி, துன்பம், துயரம், கவலை ஆகியவற்றிலிருந்து விடுபட இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்து புதுப்புடவை சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கருவறையில் காத்யாயனி அம்மன் இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கையில் கிளியும், இடக்கையில் தாமரை மலரும் தாங்கி ஐந்து தலைநாகம் குடைபிடிக்க அமர்ந்தகோலத்தில் காட்சி தருகிறாள். மற்ற முனிகளைவிட உயரமாக உள்ளார் வாள்முனி. இவரை வாழ்முனி என்றும் கூறுவர். செம்முனி, முத்துமுனி, இலாடமுனி, பாலக்காட்டுமுனி, சன்யாசி முனி ஆகியோர் இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளனர். ஜடாமுனி இரு கால்களையும் குத்துக் கால்களாகக் கொண்டு அமர்ந்து உள்ளார். இலாடமுனி, சிலை வடிவில் உள்ளார். பிற முனிகள் சுதை வடிவில் உள்ளனர். கஞ்சமலை ஈஸ்வரர் தனிக்கோயிலில் உள்ளார். இவருக்கு எதிரே நந்தியும் பலிபீடமும் உள்ளன. தொன்மைக் காலத்தில் நாட்டின் பெரும்பகுதி காடாகவே இருந்தது. காட்டில் ஓரிடத்தில் கல்லிலோ, மரத்திலோ தெய்வம் குடி கொண்டிருக்கும் அதனைக் கண்டு கொண்ட தொன்மைக்கால மக்கள் தெய்வம் குடி கொண்டிருக்கும் அந்த இடத்தை குடி என்றே அழைத்தனர். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கற்கோயிலாகக் கட்டினர். பின்னர் வசந்த மண்டபமும் ராஜகோபுரமும் கட்டப்பட்டது.  
     
  தல வரலாறு:
     
 

பச்சையம்மன் என்பவள் பார்வதிதேவி. அவளருகே இருக்கும் காத்தாயி, வள்ளி. தினைக் கொல்லையைக் காத்ததால் காத்த+ஆயி = காத்தாயி என்ற பெயர் பெற்றாள். ஏழு முனிகளும் வள்ளியை வளர்த்த நம்பிராஜனின் பிள்ளைகள். பச்சையம்மனின் தவத்திற்கு இடையூறு செய்ய வந்த எட்டுத்திக்கு தெய்வங்களையும் ஏழு முனிக்கும் இளைய முனியான வாள்முனி (குழந்தை முனி) கொன்றார். கொன்றவர்களின் தலைகளைத் தம் மூத்த சகோதரர்களிடம் ஒவ்வொன்று கொடுத்தார். எஞ்சிய இருதலைகளை தம்மிடம் வைத்துக் கொண்டார். மூத்த முனிகள் அறுவரும் அத்தலைகளைத் தம் வலக்காலின் கீழ் வைத்துள்ளனர். இளையமுனி ஒரு தலையை வலக் காலின் கீழும், இன்னொரு தலையை வலக்கையின் கீழும் வைத்துள்ளார். இது, கோயில் பூசாரிகள் சொல்லும் கதை.


காத்யாயன முனிவரின் மகளாக பார்வதிதேவி பிறந்தாள். அவளுக்கு காத்யாயனி என்று பெயர். அவளே காத்தாயி என்ற பெயரில் கிராமங்களில் கோயில் கொண்டுள்ளாள். முருகனை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் குகாம்பிகையே காத்தாயி என்று சிற்பநூல் வல்லுனர்கள் சொல்கின்றனர், அம்பிகையின் தொழில், உயிர்களைத் தன் குழந்தைபோல் காப்பது காத்த ஆயி, அவளே காத்தாயி என தமிழறிஞர்கள் சொல்கின்றனர். காத்தாய்நீ என்பது காத்யாயினி என மருவியிருக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு.


காத்யாயனி அம்மன் வடிவம் இடது மடியில் குழந்தையுடன் இருக்கும் கோயில்களே மிகுதி. சில கோயில்களில் மட்டும் குழந்தையில்லாமல் கையில் கிளியுடன் இருக்கும். வலது கரத்தில் தாமரைமலர் இருக்கும். காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வோர் அடைமொழி இருக்கும். உதாரணமாக சில இடங்களில் நல்ல காத்தாயி என்றும், சில இடங்களில் சித்தாடி காத்தாயி என்று அடைமொழியுடன் அழைக்கின்றனர். ஒவ்வோர் இடத்திலும் கதைகள் மாறினாலும் அனைத்து உயிர்களையும் தன் குழந்தையைப் போல் காத்துவரும் காத்யாயனி அம்மனை வழிபடுவோர் பயம், பிணி, துன்பம், துயரம், கவலை ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு, காக்கப்படுவது மட்டும் எந்தத் தலத்திலும் மாறுவதில்லை.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: காத்யாயனி அம்மன் இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கையில் கிளியும், இடக்கையில் தாமரை மலரும் தாங்கி ஐந்து தலைநாகம் குடைபிடிக்க அமர்ந்தகோலத்தில் வடதிசையில் காட்சி தருவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.