Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
  ஊர்: மேல்மருவத்தூர்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடிப்பூரம், தைப்பூசம், பங்காரு அடிகளாரின் பிறந்தநாள்(மார்ச் 3), நவராத்திரி ஆகியவை முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. இங்குவரும் பக்தர்களின் வசதிக்காக விழாக்காலங்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில் பஸ் வசதி செய்யப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  அன்னை இங்கு சுயம்பு வடிவாக காட்சிதருகிறாள், பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சி இங்கு சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயில் மேல்மருவத்தூர், காஞ்சிபுரம்.  
   
போன்:
   
  +91 44-27529217 
    
 பொது தகவல்:
     
  மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்பில் மருத்துவக்கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, பாலிக்டெக்னிக் முதலியவை இயக்குகின்றனர். பிரம்மாண்டமான ஆஸ்பத்திரி ஒன்றும் அமைக்கப்பட்டடுள்ளது. இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவளிக்கப்படுகிறது . இரண்டாயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட கூடம் இருக்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  அனைத்து ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு சக்திமாலை அணிவித்து இருமுடி எடுத்தும், அங்கப்பிரதட்சிணம் செய்தும், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். 
    
 தலபெருமை:
     
 

அமர்ந்த கோலம்: அன்னை ஆதிபராசக்தியின் சிலை மூன்றடி உயரம் உள்ளது. தாமரை பீடத்தில் வலதுகாலை மடக்கியும், இடது காலை ஊன்றியும் அமர்ந்திருக்கிறாள். இடக்காலை ஊன்றியிருப்பதன் மூலம் அனைத்திலும் முதன்மை தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி   என்பதும் உணர்த்தப்படுகிறது. அவள் தனது வலது கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்திருயிருக்கிறாள். பொதுவாக அம்மாள் சிலைகளுக்கு நான்கு, எட்டு என கரங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.மதுரை மீனாட்சி அம்மன்கோயிலில் அம்பாளுக்கு இரண்டு கரங்களே உண்டு. அதுபோல மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியும் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னை பராசக்தி மானிட வடிவத்தில்அருள் பாலித்த இடங்களில் மட்டுமே அவளை இரண்டு கரங்களுடன் படைப்பது வழக்கம் இவளுடைய ஞானவடிவான கூந்தல் மேலே தூக்கி முடிந்த நிலையில் இருக்கிறது.

தாமரை பீடம்: அன்னை ஆதிபராசக்தி அமர்ந்துள்ள தாமரை பீடம், இருதய கமலம். நெஞ்சத்தாமரை என்று கூறப்படுவது போல உயிர்களின் நெஞ்சமே தன்னுடைய  உறைவிடம் என்பதை உணர்த்துகிறது. தாமரை மலரின் புற இதழ்கள் கீழ்நோக்கி உள்ளன. அக இதழ்கள் மேல்நோக்கி உள்ளன. நெஞ்சின் இரண்டு பகுதிகளை அக இதழும், புற இதழும் குறிக்கின்றன. இதனை அக மனம், புறமனம் என்றும் கூறலாம். நம் புறமனம் உலக இன்பங்களில் ஈடுபட்டு, அமிழ்ந்து கீழ்நோக்கி இருக்கிறது. அகமனம் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கி எழுவதைக் குறிக்கிறது. அன்னையின் இடக்கால் கீழ்நோக்கி புற இதழ்களின் மேல் படிந்துள்ளது. அதாவது உலக இன்பங்களில் மூழ்கியுள்ள மக்கள் அழிந்துவிடாமல் அவர்களை காக்க அன்னை தனது திருவடிகளை தந்திருக்கிறாள் என புரிந்துகொள்ளலாம் . தனது இடது திருவடியை ஊன்றியிருப்பதன் மூலம் தனக்கு மேற்பட்டவர்கள்யாரும் இல்லை என்பதற்கு அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த சிலையை மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் கணபதி ஸ்தபதி வடித்துள்ளார்.

பெண்களுக்கு முக்கியத்துவம்: பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோயில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோயிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோயிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆண்டுதோறும் பெண்களே கோயில் விழாவை கொண்டாடுகின்றனர் கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர்.மாத விலக்கு என்பது வழக்கமாக வரும் உபாதை என்பதால் அது பற்றியும் பெரிதுபடுத்தி பேசவேண்டியதில்லை என்று பங்காரு அடிகளார் கூறியிருக்கிறார்.

 
     
  தல வரலாறு:
     
  மேல் மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோயிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது. இந்த வயல் பகுதியில் இங்கு வந்து இரவில் தங்கும் பக்தர்களின் வசதியைக் கருதி ஒரு கீற்றுக்கொட்டகையாவது அமைக்க வேண்டும் என சில அன்பர்கள் விரும்பினர். ஆனால் அந்த இடத்தில் கொட்டகை அமைக்க அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை மேலும் அந்த நிலத்தில் அடியில் பல சித்தர்கள் இருப்பதாகவும் பங்காரு அடிகளார் தெரிவித்தார். எனவேதான் இந்தக் கோயிலை சித்தர்பீடம் என்று அழைத்தனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சி இங்கு சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.