Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு கிருஷ்ணமூர்த்தி பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கிருஷ்ணமூர்த்தி பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கிருஷ்ணமூர்த்தி பெருமாள்
  அம்மன்/தாயார்: செண்பகவல்லித் தாயார்
  ஊர்: நாகநாதபுரம்
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பவுர்ணமி, பிரதி வியாழக்கிழமை  
     
 தல சிறப்பு:
     
  ஒரே கோயிலில் கல்வி தெய்வங்களான தெட்சிணாமூர்த்தியும் ஹயக்ரீவரும் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கிருஷ்ணமூர்த்தி பெருமாள் திருக்கோயில் நாகநாதபுரம்,சிவகங்கை.  
   
    
 பொது தகவல்:
     
  பெரியநாயகி சமேத நாகநாத சுவாமியும் தவிர தட்சிணாமூர்த்தி பிரமாண்ட திருமேனியராகக் காட்சி தருகிறார்.சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், தன்வந்திரி பகவான் ஆகியோரும் இங்கே காட்சிதருகின்றனர்  
     
 
பிரார்த்தனை
    
  படிப்பில் சிறந்த விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும், குழந்தை வரம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  ஏலக்காய் மாலை சார்த்தியும், விளக்கேற்றியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

இங்கு தனிச்சன்னதியில் காட்சி தரும் லட்சுமி ஹயக்ரீவர் விசேஷமானவர். வியாழக்கிழமைகளில் இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வணங்கினால், படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகள்கூட ஞாபகசக்தி அதிகரித்து கெட்டிக்காரர்களாக மாறுவார்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்கின்றனர் பக்தர்கள். மாதந்தோறும் பவுர்ணமியில் சிறப்பு ஹோமமும் அபிஷேகமும் நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு லட்சுமி ஹயக்ரீவரைத் தரிசித்துப் பிரார்த்தித்தால், சத்ரு பயம் நீங்கும், அறிவாற்றல் பெருகும்; தொழில் விருத்தியாகும். பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தேர்வுக்கு முன்னதாக இங்கு மாணவர்களுக்காகச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அப்போது காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல், குழந்தைகளை முதன்முதலாகப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, இங்கு அட்சராப்பியாசம் எனப்படும் நெல்லில் குழந்தைகளை எழுதச் செய்யும் வைபவம் சிறப்புற நடைபெறும்.

புதன்கிழமைகளில் பெருமாளுக்கு அவல் படைத்து வழிபட்டால் பிள்ளை வரம் பெறலாம். மாசி மக கருடசேவையைத் தரிசித்தால், 12 வருடங்கள் பெருமாளை வழிபட்ட பலன் கிடைக்கும். செண்பகவல்லித் தாயாருக்கு வில்வ மாலை மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்து நெய்தீபமேற்றி வழிபட்டால், கடன் தொல்லை ஒழியும் என்பது ஐதீகம்!

 
     
  தல வரலாறு:
     
  திருப்புல்லாணி கிராமத்துக்கு அருகில், சேதுக் கடலோரத்தில் சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, பித்ருக்களுக்கு ஏராளமானோர் திதி கொடுத்து கொண்டிருந்த வேளையில்... அங்கே கரை ஒதுங்கியிருந்த பெருமாளின் விக்கிரகத்தைக் கண்டு வியந்து மகிழ்ந்தனர். அந்த விக்கிரகத்தை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு காரைக்குடிக்குச் சென்றனர். வழியில் ஸ்ரீநாகநாத சுவாமி கோயில் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனவே, பெருமாள் விக்கிரகத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்வது என எல்லோரும் ஏகமனதாக முடிவு செய்தனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஒரே கோயிலில் கல்வி தெய்வங்களான தெட்சிணாமூர்த்தியும் ஹயக்ரீவரும் அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.