Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கைலாசநாதர்
  அம்மன்/தாயார்: ஆவுடைநாயகி
  தீர்த்தம்: கைலாச தீர்த்தம்
  ஊர்: வேம்பத்தூர்
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  தமிழ்ப்புலவர்கள் பலர் அவதரித்த சிறப்புடைய தலம் இது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வேம்பத்தூர்,சிவகங்கை.  
   
போன்:
   
  +91 97903 25083 
    
 பொது தகவல்:
     
  இங்கு விநாயகர், முருகன், நடராஜர், பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோயிலுக்கு கிழக்கு, தெற்கில் வாசல்கள் உள்ளன. வாசலில் கைலாசத் தீர்த்தக் குளம் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  சுவாமியும், அம்பாளும் புத்திரதோஷம் போக்குபவராக விளங்குகின்றனர். இங்கு திருமணம் செய்யும் தம்பதியருக்கு முதல் குழந்தை ஆண்குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

தமிழ் மணக்கும் ஊர்: தமிழ்த்தாத்தா உ.வே.சா., இலக்கியங்களைத் தொகுக்கும் போது, இலக்கியச் சுவடிகளைத் தேடி இவ்வூருக்கு வந்திருக்கிறார். செய் என்பதற்கு வயல் என்பது பொருள். இங்கு கம்பர் செய், கூத்தன் செய், பரணர் வாய்க்கால், காளமேகத் தார், அவ்வை திடல் என்று புலவர்களின் பெயர்களில் இடங்கள் இன்றும் உள்ளன. வேம்பத்தூர் குமணனார், கண்ணன் கூத்தனார் போன்ற சங்க  புலவர்கள் இவ்வூரை சேர்ந்தவர்கள்.


இதோ என் வளையல்: வேம்பத்தூரில் கவிராஜபண்டிதர் என்னும் பக்தர் அம்பிகையை உபாசித்து வந்தார். இவர் ஒருமுறை காசி கிளம்பினார். அவருடைய மகளும் உடன் சென்றாள். பாதிவழியில், அம்பாளே அவரது மகளாக உடன் சென்றாள். நிஜமகள் வீட்டுக்கு வந்துவிட்டாள். யாத்திரையின் போது, மகளுக்கு கைநிறைய வளையல் வாங்கிக் கொடுத்தார். ஆனால், ஊருக்கு திரும்பும் போது, மகளாக வந்த அம்பிகை மறைந்துவிட்டாள். உண்மை மகளிடம்,நான் வாங்கிக் கொடுத்த வளையல் எங்கே? என்று கேட்டார். ஆனால் அவளோ, எனக்கு எப்போது வளையல் வாங்கித் தந்தீர்கள்?  என்று கேட்டாள். அப்போது, அம்பிகை, இதோ இருக்கிறது வளையல்! என்று கையசைத்து மறைந்தாள். அம்பிகையே தன்னுடன் காசி வந்ததை அறிந்த கவிராஜ பண்டிதர் வியப்பில் ஆழ்ந்தார். இவர் ஆதிசங்கரர் எழுதிய சவுந்தர்ய லஹரியைத் தமிழில் மொழிபெயர்த்தார். வேம்பத்தூரில் இருந்து 40கி.மீ., தொலைவில் வீரசோழத்தில் இவருக்கு ஜீவசமாதி உள்ளது. அதனை ஐயர் சமாதி என்று குறிப்பிடுகின்றனர்.


 
     
  தல வரலாறு:
     
  மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியன் பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்தினார். இதற்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். யாகம் செய்யும் முன் வடநாட்டுக்கு யாத்திரை சென்று கயிலாயத்தை தரிசித்து வரும்படி அந்தணர்கள் ஆலோசனை கூறினர். அதற்காக, தன் மனைவி காஞ்சனமாலையுடன் கிளம்பினார். செல்லும் வழியில், மனமே கயிலாயம் என்று அசரீரி ஒலித்தது. இதுகேட்டு, பாண்டியனின் மனமும் சிவ சிந்தனையில் லயித்தது. அங்கேயே சிவபெருமானை வழிபட்டு கைலாயத்தை தரிசித்த பலனைப் பெற்றார். அந்த இடத்தில் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் சிவன் எழுந்தருளினார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தமிழ்ப்புலவர்கள் பலர் அவதரித்த சிறப்புடைய தலம் இது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar