Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: இராமலிங்கேஸ்வரர்
  உற்சவர்: சோமஸ்கந்தர்
  அம்மன்/தாயார்: பர்வத வர்தினி
  தல விருட்சம்: வில்வ மரம்
  ஆகமம்/பூஜை : காரண ஆகமம்
  புராண பெயர்: திம்மராஜ பேட்டை
  ஊர்: திம்மராஜம் பேட்டை
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாசிமகம், கந்த சஷ்டி, நவராத்திரி மற்றும் ஆடிமுதல் வெள்ளி விளக்கு பூஜை, குருப்பெயர்ச்சி.  
     
 தல சிறப்பு:
     
  மாசி மாத பௌர்ணமி அன்று மூலவர் மீது சூரிய ஒளி படும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7:00 மணி முதல்10:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பர்வத வர்தினி அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் திம்மராஜம்பேட்டை, காஞ்சிபுரம் 631502.  
   
போன்:
   
  +91 9994433598 
    
 பொது தகவல்:
     
  3 நிலைகள் கொண்ட ராஜகோபுரம். முகத்துவாரத்தில் கொடி மரம், அதன் நேர் எதிரில் நந்தி தேவர். மூலவர் சன்னதியின், வலப்புறத்தில் உற்சவர் பிரகாரம். இடப்பறத்தில் ஜயப்ப சுவாமி பிரகாரம்.அதன் அருகில் வள்ளி, தெய்வயானை சமேத திருத்தனி முருகன் சன்னதி. நவராத்தி மண்டபம்.கொடி மரத்திற்கு அருகில் வசந்தமண்டபம். அருகில் நவக்கிரக சன்னதி ஆகிய பிராகரங்களுடன் அமைந்துள்ளது.

திருத்தணி முருகப்பெருமான்: இங்குள்ள முருகப்பெருமான் திருத்தணி முருகப்பெருமான் போன்று இரண்டு கை அபயவஸ்தத்துடன் காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் திருத்தணி முருகப்பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும். அதனால் இங்கு முருகப்பெருமானிற்கு வேறெங்குமில்லாத வகையில் அர்த்த மண்டபம் மகா மண்டபத்துடன் கூடிய மிகப்பெரிய தனிச்சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் திருச்செந்தூரைப் போன்று வெகுச் சிறப்பாக நடைறுகிறது.

தியான நிலையில் குருபகவான்:
இங்குள்ள குருபகவான் ரிஷி ரூபத்தில் இரு கை கூப்பிவாறு தியான நிலையில் அமர்ந்தவாறு காட்சி தருவது சிறப்பாகும். இவர் இராமலிங்கேஸ்வரரை வணங்கி பேறு பெற்றதாக ஸ்தலபுராணம் கூறுகிறது. இவருக்கு குருப்பெயர்ச்சி மற்றும் வியாழன்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை நீங்கும், பிரதோஷகால வழிபாடு சிறப்பு வாய்ந்தது. 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பித்ருகடன் செய்ய தவறியவர்கள் இங்கு, அதற்கான தர்ப்பனங்கள் செய்வது சிறப்பு. மேலும், காஞ்சி மாநகருக்கு வெளியே உள்ள கோவில்களில் தனி கொடிமரத்துடன் விளங்கும் சிவ ஆலயம் இது. பித்ருகடன் செலுத்தப்படுவதால், வட இராமேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. கோவில் இந்து அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.  
     
  தல வரலாறு:
     
  12ம் நூற்றாண்டு இப்பகுதியில் வாழந்த போஜராஜன் ரங்கபதி ராஜய்யன் என்பவர் கோவிலை கட்டி உள்ளார். இந்த மன்னன் இராமேஸ்வரத்திலுள்ள பர்வதவர்த்தினி இராமாநாதசுவாமி மேலே சிறந்த பக்தி கொண்டதால் இறைவன் மன்னர் கனவில் தோன்றி இங்கும் இராமேஸ்வரம் போல் கோயில் அமைக்குமாறு கூறியதாக ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.

இங்குள்ள மூலவர் இராமேஸ்வரத்தில் உள்ளது போன்று இருப்பதால் இராமலிங்கேஸ்வரர் எனப்பெயர் பெற்றதாக புராணம் கூறுகிறது. இங்கு மூலர் பின்புறத்தில் சோமஸ்கந்தர் மணக்கோலத்தில் அம்பிகையுடன் வீற்றிருக்கிறார். எனவே இக் கோயில் மிகச்சிறந்த திருமணப்பிரார்த்தனை தலமாக இருக்கிறது. இது பித்தோரு தோஷ நிவர்த்தி தலமாகும். புரட்டாசி மாத மாளய அமாவசைக்கு சிறப்பு ஹோமம் மற்றும் தர்ப்பணம் நடைறுகிறது. இதில் பங்கேற்றால் பித்ருதோஷம் நிவர்த்தியாகும். இங்கு பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இங்குள்ள மூலவர் மீது மாசி மாத பௌணர்மி அன்று சூரிய ஒளி விழுகிறது. இந்த கோயிலில் இருக்கும் பர்வதவர்த்தினி அம்பாள் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ரூபமாக விளங்குகிறார்.

வணிக வரி செலுத்துவதற்காக கோவிலை, இப்பகுதியை ஆண்ட திம்மராஜ அரசனிடம் குத்தகைக்கு விடுத்தார். இப்பகுதியை சுற்றி திம்மம்பேட்டை, நாயக்கன்பேட்டை, நத்தப்பேட்டை, ஏகானாம்பேட்டை, ஜயம்பேட்டை என 18 பேட்டை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பேட்டை கிராமங்களுக்கு, தலைநகரமாக திம்மராஜம் பேட்டை விளங்கியது. மேலும், இப்பகுதியை ஆண்ட அரசன் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமானை தனி சிறப்பாக வணணங்கியுள்ளான. இதனால், வெறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இங்கு முருகபபெருமானுக்கு பெரிய பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மாசி மாத பௌர்ணமி அன்று மூலவர் மீது சூரிய ஒளி படும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar