Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு வைகுண்ட நாராயண பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வைகுண்ட நாராயண பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வைகுண்ட நாராயண பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி பூதேவி
  தல விருட்சம்: அத்தி மற்றும் துளசி
  தீர்த்தம்: ராஜபூஷ்கரணி
  ஊர்: மணக்கால் ஐயம்பேட்டை
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ராமநவமி, அட்சய திருதியை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு வைகுண்ட நாராயண பெருமாள் திருக்கோயில் மணக்கால் ஐயம்பேட்டை மற்றும் அஞ்சல் திருவாரூர்-610104.  
   
போன்:
   
  +91 9788040397 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலில் மூன்று நிலை ஐந்து கலசம் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயிலில் நுழைவாயிலில் கொடிமரம் பலி பீடம் அமைந்துள்ளது.  பிராகரத்தில் பக்த ஆஞ்சநேயர், கருடாழ்வார் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். தெற்குபக்கம் லட்சுமி குபேரர், தென்மேற்கில் சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கிறார்கள். மூலவர் கருங்கல் விக்ரஹத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட நாராயணர் அருள்பாலிக்கிறார். மூலவர் அருகில் சந்தானகோபாலகிருஷ்ணன் ஒரு காலைத்தூக்கி கையில் பிடித்தவாறு அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் மகா மண்டபம் அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்தில் இடப்பக்கம் வலம்புரி விநாயகர், நாகர் அருள்பாலிக்கிறார்கள்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் முன்னேற்றம் அடைய, சுக்கிர நிவர்த்தியடையவும், தோஷங்கள் நீங்கவும், சக்கரதாழ்வாருக்கு தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகளில் காலை 6-8 மணிக்குள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  மூலவருக்கு திருமஞ்சணம் மற்றும் நெய் அபிஷேகம் செய்து துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  கோயில் கட்ட பள்ளம் தோண்டிய போது பல்வேறு புதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. 12 ஆம் நூற்றாண்டில்  சைவ நெறி தழைத்த நிலையில் அப்பர் பெருமானால் பாடல்பெற்ற அபிமுக்தீஸ்வரர் கோயில் உருவான நிலையில் இக்கோயிலும்  பிரபலமாகியுள்ளது. இங்கு ஆதி மூலவர் நான்கு கரத்துடன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த நிலையில் சிரித்த கோலத்தில், இடதுகையில் சங்கு, அபய முத்திரையும், வலது கையில் அபய சக்கரம் மற்றும் அபய அஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார்.சோழ மண்டல வம்சத்தினர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர்.
 
     
  தல வரலாறு:
     
  புதை பொருளாக கிடைத்த விக்ரஹங்களை கொண்டு கோயில் கடப்பட்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குலோத்துங்க சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் கோயில் புதுப்பித்து கட்டி இந்த ஊரை சதுர்வேதி மங்கலம் என அழைத்துள்ளனர். கி.பி 14 ம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பின் போது கோயில் சேதமடைந்துள்ளது. அதன்பின் நாயக்கர் காலத்தில் வடிவம் பெற்றுள்ளது. பின்னாளில் கோயில் இடிந்து சேதமடைந்து முட்புதற்கள் மண்டி இருந்தது. சென்னையில் உள்ள டாக்டர் சிவராமன் கனவில்தோன்றிய பெருமாள் தனக்கு கோயில் கட்டி புதுப்பிக்க கூறியுள்ளார். அவர் சென்னையில் இருந்து இங்கு வந்து கிராம பிரமுகர்களை அழைத்து விபரத்தை கூறி கோயில் கட்டி கடந்த 2002 கும்பாபிஷேகம் நடத்தி பராமரித்துவந்தார். இக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.