Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு காமாட்சி மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு காமாட்சி மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காமாட்சி மாரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: வெண்ணாற்று
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமப்படி பூஜை
  புராண பெயர்: அதங்கோட்டு அரசன் வழி தோன்றவில் வந்தவர்கள் குடி குடி பெயர்ந்துள்ளதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
  ஊர்: அதங்குடி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை பெருவிழா,.ஆவணி மூன்றாம் ஞாயிறு பூச்செறிதல், மாசிமாதம் சிவராத்திரி,.  
     
 தல சிறப்பு:
     
  சோழர் வம்சத்தினர்கள் சோழ மண்டலத்தில் கட்டிய 108 கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் அருகில் இக்கோயில் உள் ளது சிறப்பாக இருப்பதுடன், கிராம தேவதையாக சுற்றுப்பகுதியினர் வணங்கி வருகின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு காமாட்சி மாரியம்மன் திருக்கோயில் அதங்குடி வடக்கு சேத்தி, அதங்குடி அஞ்சல், நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்- 614103.  
   
போன்:
   
  +91 4367-236817 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப்பக்கம் வாயில், மகாமண்டபம் ப வடிவில் 100 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வகையில்  உள்ளது. கோயில் எதிரில் வெண்ணாறும் அதன் அருகில் தலைவிருட்சம் மற்றும் முன்னடியான்., பீடம் உள்ளது. தூண்டில் காரன் தாழ்வாரத்தில் வேல் மற்றும் பலி பீடமும், கிழக்குபக்கம் பார்த்த வகையில் இடபக்கத்தில் வினாயகர், வலது பக்கம்  நாகரும் உள் பிரகாத்தில் காமாட்சி மாரியம்மன்  மற்றும் காத்தவராயன் ஆரியமாலாஅருள்பாலிக்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  சகல ஐஸ்வர்யங்களுக்கும், திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியம், திருடு போன பொருட்கள் கிடைக்கவும், தீராத வியாதிகள் தீரவும், அம்மை நோய் கண்டவர்களுக்கும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறியவர்கள் நெய் தீபம் ஏற்றியும், திருமணம் நிறைவேறியவர்கள் அம்மனை மணமகள் கோலத்திலும், புத்திரபாக்கியம் பெற்றவர்கள் தொட்டில் கட்டியும் வழிபாடு செய்கின்றனர். மேலும் நோய் குணம் அடைந்தவர்கள் வயிற்றில் மா விளக்கு ஏற்றியும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவத்தலம், அருகில் வரதராஜபெருமாள் கோயில் இருப்பதும், 18 கிராமத்திற்கு எல்லை அம்ம னாக இருப்பதால் சுற்றுப் பகுதியினர்கள் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். அம்மை நோய் கொண்ட அனைத்து மதத்தினர்களும் வந்து செல்கின்றனர்.  
     
  தல வரலாறு:
     
  சோழவளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூக்கும் மேற்கே 19  கி.மீ.,தொலைவில்  இக்கிராமம் அமைந்துள்ளது.  இப்பகுதியில் சோழ மன்னர்கள் கட்டிய சிவத்தலங்கள் 108ல் ஒன்றும் வரத ராஜ பெருமாள் கோயில் உள்ள 200 மீட்டர் தொலைவில் உள்ள இக் கோயிலில் உள்ள காமாட்சி அம்மனை காவல் தெய்வமாக 18 கிராமத்தினர்கள் வணங்கி வருகின்றனர். சோழ மன்னர்கள் வம்சத்தினர்களுக்கு ஆபரண அணிகலன்கள் செய்த பொற் கொல்லர்கள் இப்பகுதியில் வசித்ததால் அவர்கள் விருப்ப தெய்வாக காமாட்சியை வணங்க சோழர்காலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் கோயில் பழுதடைந்ததால் அப்பகுதியினர் வரி வசூல் செய்து புது கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். 1967 ம் ஆண்டில் இருந்து பல்வேறு வகையில் வடிவம் பெற்றுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. . அம்மை நோய் வயப்பட்ட அனைத்து மதத்தினர்களும் இங்குவந்து செல்கின்றனர். இப்பகுதியில் இருந்து வெளிநாடு, வெளி மாநிலங்களில் குடி பெயர்ந்துள்ள பக்தர்களின் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சோழர் வம்சத்தினர்கள் சோழ மண்டலத்தில் கட்டிய 108 கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் அருகில் இக்கோயில் உள்ளது சிறப்பாக இருப்பதுடன், கிராம தேவதையாக சுற்றுப்பகுதியினர் வணங்கி வருகின்றனர்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.