Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜபெருமாள்
  உற்சவர்: பாமாருக்மணி சமேத வேணுகோபாலர்
  அம்மன்/தாயார்: சீதேவி, பூதேவியார்
  தல விருட்சம்: துளசி
  தீர்த்தம்: ராமபூஷ்கரனி
  ஆகமம்/பூஜை : வைகானச ஆகமப்படி பூஜை
  புராண பெயர்: அதங்கோட்டு அரசன் வழி தோன்றலில் வந்தவர்கள் குடி பெயர்ந்துள்ளதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
  ஊர்: அதங்குடி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி 3 வது சனிக்கிழமை, திருவோணம், அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட பெருமாளுக்குரிய அனைத்தும்.  
     
 தல சிறப்பு:
     
  வலது பக்கம்: சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ ஆஞ்சநேயர் ஒருகை பொத்தி, ஒரு கையை கீழே வைத்து கட்டளையிடுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி வடக்கு சேத்தி, அதங்குடி அஞ்சல், நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் 614103.  
   
போன்:
   
  +91 99760-88737 
    
 பொது தகவல்:
     
  தெற்கு பக்கம் நுழைவு வழி, தெற்கு பக்கம் பார்த்த வகையில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதா பிராட்டியாரும் அவரை பார்த்த வகையில் பக்த ஆஞ்சநேயரும்(பட்டாபிஷேக கோலத்தில்), ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜபெருமாள் கிழக்குப்பக்கம் பார்த்த வகையிலும்,  தனி சன்னதியில் வடக்குப் பக்கம் பார்த்த வகையில் கருட ஆழ்வார், தன்வந்திரி வடக்குபக்கமும், சிவசக்கி ஆஞ்சநேயர் கிழக்குப் பக்கமும் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். எட்டு தூண்களுடன் மகா மண்டபடம் 200 பேர் அமர்ந்து அருள்பாலிக்கும் வகையில் அமைந்துள்ளது. நுழைவு வாயிலில் பலிபீடத்துடன் மொத்தத்தில் நான்கு கலசம் அமைக்கப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணம் ஆகாதவர்கள், மன சஞ்லம், கோர்ட் விவகாரம், நோய் தீரவும், புத்திர பாக்கியம் நவகிரக தோஷ பீடைகள் தீரவும் பக்தர்கள் இங்குள்ள பெருமாளை மனதார பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  ஆஞ்ச நேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சாத்தி வழிபாடு செய்தால் காரியம் கை கூடும். தன்வந்திரிக்கு திங்கள் கிழமை தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தீராத நோய்குணமடையும். 
    
 தலபெருமை:
     
  ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு ஐயோத்திக்கு செல்லும் போது பரத் துவராஜர் முனிவர், ஆசிரமத்தில் தங்கி, திருமண கோலத்தில் சேவை சாதித்தது. இங்கிருந்து பாதயாத்திரையாக (ராமன், சீதை, ஆஞ்சநேயர், லட்சுமணர் மற்றும் முனிவர்கள் புடை சூழ சென்றதாக வரலாறு) சென்றதாக புராணம் கூறுகிறது.  
     
  தல வரலாறு:
     
  ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு ஐயோத்திக்கு செல்லும் லட்சுமணன் தங்கியதால் லட்சுமணன்குடி என்றாகி பின்னாளில் லட்சுமாங்குடி என்றாகியது. அதன் பின் சோழ மண்டலத்தில் சோழ மன்னர்கள் கட்டிய 108 சிவத்தலத்தில் ஒன்றான அகிலாண்டேஸ்வரி சமேத விருப்பாட்சீஸ்வரர் கோயில் கட்டப்பட்டள்ள நிலையில் வரதராஜபெருமாள் மற்றும் ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தியுள்ளனர். கோயில் சேதமடைந்ததால் அப்பகுதியினர் ஒருங்கிணைந்து கோயில் கட்டி கடந்த 2013 செப்டம்பர் மாதம் குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வலது பக்கம்: சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ ஆஞ்சநேயர் ஒருகை பொத்தி, ஒரு கையை கீழே வைத்து கட்டளையிடுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.