Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கல்லுளி மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கல்லுளி மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கல்லுளி மாரியம்மன்
  உற்சவர்: கல்லுளி மாரியம்மன்
  அம்மன்/தாயார்: கல்லுளி மாரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: திருக்குளம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: நவனீதபுரம் பின்னாளில் வெண்ணைய்வாசல் என மறுவியுள்ளது., (நவனீதம் என்றால் வெண்ணைய் என பொருள்) கிருஷ்ணனுக்கு இப்பகுதியில் <<வெண்ணை உற்பத்தி செய்து அனுப்பியதால் வெண்ணைய்வாசல் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
  ஊர்: வெண்ணைய் வாசல்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை திருவிழா, சாரதா நவராத்திரி விழா 16 நாள் உற்சவம் (புரட்டாசி அமாவாசை முதல் பவுர்ணமி வரை) கோகுல அஷ்டமி விழா கொண்டாடப்படுகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  ராஜராஜ சோழன் காலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கல்லுளி மன்னன் வட நாட்டிற்கு போர் தொடுக்க செல்லும் முன் அந்த மன்னன் வழிபட்ட அம்மன் என்பதால் பின்னாளில் கல்லுளி மாரியம்மன் என அழைக்கப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.00 மணி முதல் காலை 9.00 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 7 .00மணிவரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கல்லுளி மாரியம்மன் திருக்கோயில், வெண்ணைய்வாசல் அஞ்சல், கொரடாச்சேரி வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் 613703.  
   
போன்:
   
  +91 99760 52389, 89036 63144 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப்பக்கம் வாயில் கற்பகிரகத்தில் ஒரு கலசம் அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் 500 பேர் அமர்ந்து தரிசனம் செய்யலாம், மகா மண்டபத்தில் பலி பீடம் எதிரில் மூலவரை பார்த்த வகையில் (மேற்கு பக்கம்) கழுவடியான் சுதையாக அமர்ந்திருக்கிறார். இடபக்கம் விநாயகர், வலப்பக்கம் பாலமுருகன் கிழக்குப் பக்கம் பார்த்த வகையிலும், ஐயப்பன், பேச்சியம்மன், மதுரை வீரன்(தனி) வடக்குப் பக்கமும், கருப்பண்ணன் கருப்பழகியுடன், மதுரைவீரன் வெள்ளையம்மாள் மற்றும் பொம்மியுடன் தெற்கு பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் துர்கை, பேச்சியம்மன் வடக்குப்பக்கமும், காளிம்மாள் கிழக்குப்பக்கமும், காத்தவராயன் ஆரியமாலா மற்றும் கருப்பழகியுடன் (தொட்டியத்து சின்னான் அருகில் நிற்க) கிழக்கப் பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். கோயில் சிறு கலசங்கள் உட்பட ஆறு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் காலம், 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்கிறது. 1997 ம் ஆண்டிற்குப் பின் 2009 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, புத்திரபாக்கியம், நாகதோஷம், அம்மை, வயிறு, கண் நோய் உள்ளவர்கள் அதிகளவில் வந்து பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், பால்குடம் எடுப்பது, பால் அபிஷேகம், வயிற்றில் மாவிளக்கு ஏந்தல், பாவாடை மற்றும் தொட்டில் கட்டுதல், ஷெடல் காவடி எடுத்தல் போன்றவை நேர்த்திக்கடனாக செலுத்துக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  சோழர் காலத்திற்கு முன் மாரியம்மன் குல தெய்வ வழிபாடு நடந்துள்ளது. அப்பகுதியில் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசித்துள்ளனர். அப்போது அம்மை போட்டவர்களுக்கு இந்த மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி தண்ணீர் கொடுத்ததால் அம்மை குணமடையும் என்பதால் அங்கிருந்து வேப்பிலை மற்றும் தண்ணீர் கொடுத்தனுப்பவது வழக்கமாக இருந்துள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கல்லுளி மன்னன் வட நாட்டிற்கு போர் தொடுக்க செல்லும் முன் அந்த மன்னன் வழிபட்ட அம்மன் என்பதால் பின்னாளில் கல்லுளி மாரியம்மன் என அழைக்கப்பட்டுள்ளது.

 
     
  தல வரலாறு:
     
  இந்துமுஸ்லிம் மக்கள் வசித்த பகுதியில் கல்லுளி மன்ன ன் வட நாட்டிற்கு போர் தொடுக்க செல்லும் நிலையில் ஊரில் அம்மை ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மன்னன் போருக்கு செல்வதா அல்லது அம்மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதா என குழப்பத்தில் இருந்த போது அம்மன் மன் னனிடம் நான் மக்களை பார்த்துக் கொள்கிறேன். நீ! உன் கட மைக்கு செல் என அசரீரியாக தெரிவித்ததும் உடன் மன்னன் போருக்கு சென்றார். முன்னதாக அப்பகுதியில் உள்ள முஸ்லிம் ஒருவரிடம் மாரியம்மன் சுவாமி சிலையை கொடுத் துசென்றுள்ளார். அப்பகுதியில் மாரியம்மன் திருவருளா ல் அனைத்து மக்களுக்கும் அம்மை நோய் குணம் அடைந்துள்ளது. பின்னர் அப் பகுதியை சேர்ந்த மகாதேவபிள்ளை என்பவர் இந்த அம்மனை முஸ்லீம்களிடம் இருந்து பெற்று வந்து சிறுகோயில் கட்டினார். மன்னன் நினைவாக கல்லுளி மாரிம்மன் என பெயர் சூட்டினார். பின்னாளில் வளர்ச்சி பெற்றுள்ளது.அதனால் இன்றளவும் முஸ்லிம்களும் இந்த அம்மனுக்கு சிறப்பு செய்து வருகின்றனர்.  ராஜராஜ சோழன் இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.  1984 இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்கிறது. 1997 ம் ஆண்டிற்குப் பின் 2009 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ராஜராஜ சோழன் காலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கல்லுளி மன்னன் வட நாட்டிற்கு போர் தொடுக்க செல்லும் முன் அந்த மன்னன் வழிபட்ட அம்மன் என்பதால் பின்னாளில் கல்லுளி மாரியம்மன் என அழைக்கப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar