Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகா மாரியம்மன்
  உற்சவர்: மகா மாரியம்மன்
  அம்மன்/தாயார்: மகா மாரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: சிவக்குளத்து தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: பகிர்த்த பிரயாயணம் (ஆகாய, கங்கை) இறைவன் ஜடா முடியில் இருந்து எடுத்து விட்டதால் இவ்வூர் பெரிய குடை என்றாகி பின்னாளில் பெரிய குருவடி என மறுவியுள்ளது.
  ஊர்: பெரிய குருவடி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரையில் 10 நாள் உற்சவம் மற்றும் அம்மனுக்குரிய அனைத்தும் விசேஷங்களும் நடைபெறுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இந்த கோயிலின் முன் பக்கம் பழமையான சோழர்காலத்து சிவன்கோயிலும், வடக்கு பக்கம் ஜலகிரிஸ்வரர், தெற்கே காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியர் பிறந்த இருள் நீக்கி கிராமமும், கிழக்கே திருநெல்வேலிக்காவல் நெல்லிவன நாதர் கோயிலும், மேற்கே திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலும் இருப்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், பெரிய குருவடி மற்றும் அஞ்சல், வடபாதிமங்கலம் வழி, மன்னார்குடி தாலுகா, திருவாரூர் மாவட்டம்610206.  
   
போன்:
   
  +91 95853 74125 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப்பக்கம் வாயில் கற்பகிரகத்தில் ஒரு கலசம், மகா மண்டபத்தில் நான்கு தூன்கள். 200 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். கற்பக விநாயகர், கழுவுடையான்,  காத்தவராயன் ஆரியமாலா மற்றும் கருப்பழகியுடனும், கருப்பண்ணசாமி பொம்மியுடனும், முத்தாலு ராவுத்தர் குதிரையிலும், கருப்பாயி அம்மன், பேச்சியம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  புத்திரபாக்கியம், உடல் பிணி, கண்நோய், அம்மை, செல்வ வளத்திற்கும் பரிகாரஸ்தலம். கண்நோய் உள்ளவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இங்கு குல தெய்வ வழிபாடும் நடக்கிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  காவடி மற்றும் பால்குடம் எடுத்தல், தொட்டில் கட்டுதல், கண்ணடக்கம் காணிக்கை செலுத்தல், தென்னம்பிள்ளை மற்றும் உப்பு, மிளகு செலுத்துவது நேர்த்திக்கடனாக செலுத்துக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் பேரன், கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் மகனும், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன் எனும் சோழ அரசர்களின்  உடன்பிறப்பான வீர ராஜேந்திர சோழன் கி.பி.1063 ம் ஆண்டு மணி முடிசூடி 1070ம் ஆண்டு வரை சோழ பேரரசனாக விளங்கினான். அவன் காலத்தில் இப்பகுதியில் கட்டப்பட்ட சிவத்தலத்திற்கும் மேற்கில் கோயில் கொண்டு அம்மன் அருள்பாலிப்பது தலத்திற்கு பெருமை சேர்கிறது.  
     
  தல வரலாறு:
     
  வீரராஜேந்திர சோழன் கி.பி.1063 ம் ஆண்டு மணி முடிசூடி 1070ம் ஆண்டு வரை சோழ பேரரசனாக விளங்கினான். வீரராஜேந்திரசோழனின் ஆணை ஒன்று கருவூரில் உள்ள பசுபதீஸ்வரர் திருக்கோயில் எனும் திருவாநிலை மகாதேவர் கோயிலில் கருவறையில் கல்வெட்டுள்ளது. இதில் பயிர்த்தொழில் சிறக்கவும், செல்வவளம் சேர்க்கவும் இப்பகுதியில் கோயில் கொள்ள வேண்டும் என எழுதியிருந்தான்.  தற்போது பெரிய குருவடியில் உள்ள அகஸ்தீஸ்வரர் எனும் சிவத்தலம் கற்றளியாக விளங்குகிறது. இத்தலத்திற்கும் அருகில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் பழங்காலம் முதல் புதுப்பித்து பராமரித்து வருகின்றனர். பழமையான கோயில். தற்போது புதுப்பித்து 2013 செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இந்த கோயிலின் முன் பக்கம் பழமையான சோழர்காலத்து சிவன்கோயிலும், வடக்கு பக்கம் ஜலகிரிஸ்வரர், தெற்கே காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியர் பிறந்த இருள் நீக்கி கிராமமும், கிழக்கே திருநெல்வேலிக்காவல் நெல்லிவன நாதர் கோயிலும், மேற்கே திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலும் இருப்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.