Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காசி விஸ்வநாதர்
  அம்மன்/தாயார்: விசாலாட்சி
  தல விருட்சம்: அரசு, வில்வம்
  தீர்த்தம்: சிவக்குளம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: குருடர் சேரி
  ஊர்: கொரடாச்சேரி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீப விழா, பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு பங்குனி 7,8.9 தேதிகளில் சூரிய ஒளி ஊடுருவி மூலவர் மீது படுவது சிறப்பம்சமாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை8.00 மணி முதல் 10.00 மணி வரையும், மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், கொரடாச்சேரி குடவாசல் தாலுகா, திருவாரூர்- 613 703.  
   
போன்:
   
  +91 99431 52999 
    
 பொது தகவல்:
     
  பஞ்சநாதீஸ்வரர் பெயராலும், பஞ்சலோங்களை கொண்டு, பஞ்சபூதங்கள், ஐம்புலன்களை அடக்கி சிவனை வழிபட்டதால், பஞ்சாட்சரபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பார்வையற்றவர்கள் சிலர் இங்கு வழிபாடு நடத்தியதால் குருடர் சேரி என்றாகி பின்னர் கொரடாச்சேரி என மருவியதாக கூறப்படுகிறது. கிழக்குப்பக்கம் நுழைவு வாயிலில், எதிரில் சிவக்குளம், கரையில் தலவிருட்சமான அரச மரம் உள்ளது. கோயிலில் இடது பக்கம் ஞான விநாயகர், ஞானவேலவன், விசாலாட்சி தாயார், ஞான துர்க்கை, பலிபீடம், நந்தியும் எதிரில் செல்லிம்மன், கஜலட்சுமி, மனோன்மணி வடக்குபக்கம் பார்த்து அருள்பாலிக்கின்றனர். மேலும் சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன் அருள்பாலிக்கின்றனர். மொத்தத்தில் நான்கு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 500  ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படுகிறது. கோயில் இருந்த இடம் தெரியாது. புதியதாக கோயில் கட்டி 2012- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்க, புத்திரபாக்கியம் மற்றும் திருமணத்தடை மற்றும் நோய்கள் நீங்க பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தியும், அன்னாபிஷேகம் செய்தும் வருகின்றனர். நோய் பிடியில் இருந்து விடுபட்டவர்கள் நவக்கிரக ஹோமம் நடத்தி வருகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சூரியபகவான், மகாவிஷ்ணு, பெருமாள் பூஜித்த தலமான மெயின் சாலையில் உள்ள கோயிலுக்கு இப்பகுதியில் இருந்து நடந்து சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். கி.பி., 1500 ஆண்டுகள் முற்பட்டது. சோழர் வம்சத்தினர் கட்டிய 108 கோயில்களில் இதுவும் ஒன்று. பிற்காலத்தில் அழிந்துள்ளது. நந்தி மட்டும் அப்பகுதியின் வயல்வெளியில் கிடந்தது. நந்தியை வைத்து சிவத்தலம் உருவாகியுள்ளது. காசிக்கு செல்லாதவர்கள் இக்குளத்தில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்கினால் காசிக்கு சென்ற பாக்கியம் உண்டு.
 
     
  தல வரலாறு:
     
  சோழர் வம்சத்தினர்கள் கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. திருஞான சம்மந்தர் பூதூர் வழியாக செல்லும் திருக்கொள்ளிகாடு பொங்கு சனீஸ்வரர் கோயிலுக்கும், திருவிடைவாயில் கோயிலுக்கும் சென்று பாடல் பாடியதற்கு இவ்வழியாக சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கல்வெட்டுகள் அதிகளவில் அழிந்துள்ளதால் வரலாறுகள் தெரியவில்லை. நந்தியை வைத்து கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பாபு  என்பர் இப்பகுதி மாப்பிள்ளை இவர் கனவில் நந்தி தோன்றி கோயில் கட்டக் கேட்டுக் கொண்டதன் பேரில் கோயில் உரு வாக்கப்பட்டுள்ளது. அதன் பின் பிர விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து குடிபெயர்ந்து பல்வேறுப்பகுதியில் வசித்து வரும்  உபயதார்கள் வந்து செல்கின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி 7,8,9 தேதிகளில் சூரிய ஒளி ஊடுருவி மூலவர் மீது படுவது சிறப்பம்சமாகும்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.