Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு ஆதிமூல நராயணப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஆதிமூல நராயணப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆதிமூல நராயணப் பெருமாள்
  உற்சவர்: ஆதிமூல நராயணப் பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  தீர்த்தம்: பூகர்ப தீர்த்தம்
  புராண பெயர்: கபித்யாரண்யம்
  ஊர்: விளாங்காடு
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி  
     
 தல சிறப்பு:
     
  இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவரும், மூலவரும் அச்சில் வார்த்ததுபோல இருப்பது பெருமை. கஜேந்திர மோஷஸ்தலமும், ஸ்ரீ நாரதமுனி, ஸ்ரீ பிருகு மகரிஷிக்கு நவக்கிரக மண்டல ரகசியங்களை போதித்தருளிய திருத்தலமுமாதலால் நவக்ரஹ தோஷம் மற்றும் மூதாதையர் (பித்ருக்கள்) தோஷம் மற்றும் சாப நிவ்ருத்தி ஸ்தலமாகும். கருடன் மற்றும் ஆதிசேஷனின் கடாக்ஷம் உள்ளதால் ஸர்ப்பதோஷ நிவ்ருத்தி ஸ்தலமுமாகும். விசாக நட்சத்திரக்காரர்கள் முக்கியமாக வணங்கவேண்டிய ஸ்தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. 
   
முகவரி:
   
  ஆதிமூல நராயணப்பெருமாள் கோயில் விளாங்காடு கிராமம் - 603201. அச்சரப்பாக்கம் அருகில், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 9840344082 
    
 பொது தகவல்:
     
  இக்கோயிலில் தாயார் சன்னிதி, திருமடைப்பள்ளி, நந்தவனம், அர்ச்சகர் தங்கும் இல்லம், மகா மண்டபம், அனுமார் சன்னதி, ஆண்டாள் சன்னதி போன்றவை அன்பர்களால் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வரிய க்ஷேத்ர மகிமையறிந்து பல ஊர்களில் இருந்தும் மக்கள் அனுதினம் இங்கு வருகிறார்கள்.

இக்கோயிலில் 29.06.2014 அன்று கும்பாபிஷேகமும், 15.08.2014 அன்று மண்டல பூஜை நிறைவும் நடைபெற்றது.
 
     
 
பிரார்த்தனை
    
  கிரஹ தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.  
    
 தலபெருமை:
     
  இத்தலம் குறித்தது பிரபல ஜோதிட வல்லுனர்களிடம் பிரசன்னம் பார்த்த போது, இத்தலத்தை வராஹ ேக்ஷத்திரம் என்றும், புராண காலத்தில் மகாலட்சுமி பூஜித்துள்ளார் என்றும் தெரியவருகிறது. அதன் காரணமாக இன்றும் கூட இங்குள்ள தீர்த்த குளம் முழுவதும் தாமரை மலர்கள் மட்டுமே மலர்வது சிறப்பு.

அத்துடன், இத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தலம் மிகச்சிறந்த பரிகாரத்தலமென்றும் கூறுகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  கஜேந்திரனுக்கு பெருமாள் மோட்ஷம் கொடுத்த இடம் சுபித்யாரண்ய ஷேத்திரம். இங்குதான் நாரதர், பிருகு முனிவர் ஆகியோருக்கு கோள்களின் கோச்சாரம், அவற்றின் சாதக பாதகங்கள், மனித வாழ்க்கையில் நவக்கிரஹங்கள் எப்படி சம்பந்தப்பட்டு உள்ளன என்பதைப் பற்றி பெருமாள் உபதேசித்ததாக புராணம் கூறுகின்றன.

பூகர்ப மகரிஷி அங்கு பெருமாள் திருமேனியை சிலா ரூபமாக வடித்து, அருகில் தனது பெயரில் திருக்குளத்தை ஏற்படுத்தினார். அக்குளம் பூகர்ப தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. அங்கு பூமாதேவி தினமும் பெருமாளை ஆராதித்து வந்தார். கோள்களின் சுழற்சியும், அதன் பலனையும் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லும் ஜோதிடர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பெருமாளை தரிசித்து, அருள்வாக்கு கூறினர். அத்தலம் காலப்போக்கில் விளாங்காடு என அழைக்கப்பட்டது.

போரால் அழிந்த கோவில்: விஜயநகர அரசர்கள் காலம் வரை ஆதிமூல நராயணப் பெருமாள் கோவிலில் ஐந்து கால பூஜைகளும், பஞ்ச பருவ விழாக்களும், பிரம்மோற்சவமும் விமர்சையாக நடந்ததாக வரலாறு கூறுகின்றன. விஜயநகர ராஜ குருவாக வியாசராஜரும், ராகவேந்திரரும் ஆதிமூல நாராயணப் பெருமாளை தரிசித்து சென்றதாக செவி வழித் தகவல்கள் கூறுகின்றன. புதுச்சேரி பிரஞ்ச் படைகளும், ஆங்கிலேய, ஆற்காடு நவாப் படைகளும் இடையே ஏற்பட்ட பூசலில் விளாங்காடு கடுமையாக பாதிக்கப்பட்டது. யுத்த காலத்தில் பூஜைகள் நிறுத்தப்பட்டன. ஆதிநாராயணர் கோவிலும், அதனை சுற்றி இருந்த குடியிருப்புகளும் பழுதுபட்டன. காலப்போக்கில் கோவில்முழுவதும் சிதலமடைந்தது. ஒரு கட்டத்தில் அங்கு கோவில் இருந்த சுவடே இல்லாமல் போனது. பின்னாளில், அங்கு மாட்டு தொழுவம் உருவானது.

கிரஹ தோஷ நிவர்த்தி தலம்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விளாங்காடு பகுதியில் அய்யப்ப பக்தர்கள் பூஜை செய்துக் கொண்டு சென்றனர். அதில், ஒரு பக்தருக்கு ஆவேசம் வந்து, மாட்டுத் தொழுவம் இருந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலைகளை அடையாளம் காட்டினார். அது, ஆதிமூல நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் சிலை என்பது தெரியவந்தது. ஊர் மக்கள் சேர்ந்து அங்கு ஒரு குடில் அமைத்து, சிலைகளை வழிபடத் துவங்கினர். அடுத்து, சிறிய கோவில் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அக்கோவிலில் நடை திறக்கும் பல நாட்களில் ஆதிமூல நாராயணர் மூலவர் மேல் பாம்பு ஒன்று படை எடுத்து நிற்கும் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. பெருமாளை ஆதிசேஷன் இன்றும் வழிபட்டு வருவதாக கருதுகின்றனர். இக்கோவில் உற்சவர் சிலை சுவாமிமலையில் இருந்து தருவிக்கப்பட்டது.

இக்கோவிலில் அருள் பாலிக்கும் ஆதிமூல நாராயணப் பெருமாள் கிரஹ தோஷங்களை நிவர்த்திப்பவர் என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் தான், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஜோதிடர்கள் அதிகளவில் வந்து வழிபாடு நடத்துகின்றனர். இக்கோவிலில் மகா மண்டபத்துடன் திருப்பணிகள் நடந்து வருகின்றன.

ஆதிமூல நாராயணர் டிரஸ்ட் தலைவர் கோபால் ரத்தினம் கூறுகையில்: முற்காலத்தில் ஆதிமூல நாராயண பெருமாள் கோவில் மிக பிரம்மாண்டமாக இருந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. முற்றிலும் சிதலமடைந்த இக்கோவிலை மீண்டும் பக்தர்கள் ஒத்துழைப்புடன் மிண்டும் நிர்மாணித்து வருகிறோம். பழைய கோவிலில் இருந்த மூலவர் சிலை, கொடிமரம் கிடைத்தது. தற்போது, மகாமண்டபம், கோவிலை சுற்றி, மதில்சுவர் எழுப்புவது, தாயார், ஆண்டாள் சன்னதி அமைப்பது, பூகர்ப தீர்த்த குளத்தை புனரமைப்பது ஆகிய திருப்பணிகள் நடத்தி வருகிறோம். பக்தரகள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். தற்போது, ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது. விரைவில் ஐந்து கால பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்றார்.

இக்கோயில் திருப்பணியில் பங்கேற்க விரும்புபவர்கள்
கீழ்கண்ட வங்கியில் பணம் அனுப்பலாம்.

THE ADHIMOOLA NARAYANA TRUST
INDIAN OVERSEAS BANK
MEDAVAKKAM BRANCH
CHENNAI - 600100
SB A/C NO182201000003611
IFSC CODE IOBA0001822

நன்கொடைகளுக்கு வருமானவரிச்சட்டம் 80 ஜி பிரிவன்கீழ் வரிவிலக்கு உண்டு.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: உற்சவரும், மூலவரும் அச்சில் வார்த்ததுபோல இருப்பது பெருமை.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.