Special supplement · Part 2 · page 39 · 67 / 159
சைவமும் தமிழும்
சைவமும் தமிழும் தழைத்த மதுரையைப் பற்றித் தேவாரத்தில் 120 பாடல்கள் உள்ளன. இவற்றில் திருஞானசம்பந்த சுவாமிகள் 99 பாடல்களும், திருநாவுக்கரசு சுவாமிகள் 21 பாடல்களும் பாடி இருக்கிறார்கள். ‘மதுரைப் பெருநல் மாநகர்’ என திருவாசகம் போற்றுகிறது. வரலாற்றில் தமிழ் மொழியின் மாண்புக்கு வளம் சேர்த்ததில் எல்லாக் காலங்களிலும் மதுரைத் தலத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.