Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 41 · 75 / 159

20 குறிப்புகள்

  1. தமிழ்ச்சங்கம் இருந்த சங்கப் புலவர்கள் வாழ்ந்த தலம்
  2. சிவபெருமான் தமிழ்ச்சங்கப் புலவராக வீற்றிருந்த தலம்,
  3. சொக்கநாதரின் கட்டளைப்படி சங்கப் புலவர்களுக்கு இருப்பிடமாக சங்கப்பலகை தாங்கி இருந்தது பொற்றா மரைக்குளம்.
  4. நக்கீரதேவ நாயனாரின் திருமுருகாற்றுப்படை தோன்றிய தலம்.
  5. ஆறுபடை வீடுகளில் முதல் தலமான திருப்பரங்குன்றம் உள்ள தலம்.
  6. ஆறுபடை வீடுகளில் ஆறாம் தலமான சோலைமலை உள்ள தலம்.
  7. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகர்கோவில் உள்ள தலம்.
  8. தெய்வப்புலவர் திருவள்ளுவ தேவ நாயனாரின் திருக்குறள் அரங்கேறிய தலம்.
  9. மணிமேகலை காப்பியம் தோன்றிய தலம்.
  10. திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமான் அவதாரம் செய்த திருத்தலம்.
  11. சைவ சமயத்தின் பெருமையை திருஞானசம்பந்தர் நிலைநிறுத்திய தலம்.
  12. சைவத்திருமுறைகளில் சிறப்பான இடத்தை மதுரையம்பதி பெற்றிருக்கும் தலம்.
  13. பெரியாழ்வார் பால்லாண்டு பாசுரம் பாடிய தலம்.
  14. அறுபத்து மூன்று நாயன்மார்களில் இருபாலரும் இடம் பெற்ற தலம்.
  15. திருவிளையாடல் பிறந்த திருத்தலம்.
  16. குமரகுருபரரின் ஞானத்தமிழுக்கு அன்னை மீனாட்சியம்பிகையே பரிசு கொடுத்த தலம்.
  17. தருமையாதின குரு முதல்வரான குருஞானசம்பந்தர் சொக்கநாத வெண்பா பாடியருளிய தலம்.
  18. சற்குரு அருணகிரிநாதர் கூடல் குமரனை கொண்டாடி மகிழ்ந்த தலம்.
  19. பல அருமை, பெருமைகளையும் கொண்ட மதுரையம்பதி தமிழ் இலக்கியங்களில் முதலிடம் பெற்று மூதூர் என்று போற்றப்படுகிறது.
  20. சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியங்கள் வரை கொண்டாடி மகிழும் பெரிய திருத்தலம் இம்மதுரை.
Advertisement
Advertisement
Top
Advertisement