சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 41 · 75 / 159
20 குறிப்புகள்
- தமிழ்ச்சங்கம் இருந்த சங்கப் புலவர்கள் வாழ்ந்த தலம்
- சிவபெருமான் தமிழ்ச்சங்கப் புலவராக வீற்றிருந்த தலம்,
- சொக்கநாதரின் கட்டளைப்படி சங்கப் புலவர்களுக்கு இருப்பிடமாக சங்கப்பலகை தாங்கி இருந்தது பொற்றா மரைக்குளம்.
- நக்கீரதேவ நாயனாரின் திருமுருகாற்றுப்படை தோன்றிய தலம்.
- ஆறுபடை வீடுகளில் முதல் தலமான திருப்பரங்குன்றம் உள்ள தலம்.
- ஆறுபடை வீடுகளில் ஆறாம் தலமான சோலைமலை உள்ள தலம்.
- 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகர்கோவில் உள்ள தலம்.
- தெய்வப்புலவர் திருவள்ளுவ தேவ நாயனாரின் திருக்குறள் அரங்கேறிய தலம்.
- மணிமேகலை காப்பியம் தோன்றிய தலம்.
- திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமான் அவதாரம் செய்த திருத்தலம்.
- சைவ சமயத்தின் பெருமையை திருஞானசம்பந்தர் நிலைநிறுத்திய தலம்.
- சைவத்திருமுறைகளில் சிறப்பான இடத்தை மதுரையம்பதி பெற்றிருக்கும் தலம்.
- பெரியாழ்வார் பால்லாண்டு பாசுரம் பாடிய தலம்.
- அறுபத்து மூன்று நாயன்மார்களில் இருபாலரும் இடம் பெற்ற தலம்.
- திருவிளையாடல் பிறந்த திருத்தலம்.
- குமரகுருபரரின் ஞானத்தமிழுக்கு அன்னை மீனாட்சியம்பிகையே பரிசு கொடுத்த தலம்.
- தருமையாதின குரு முதல்வரான குருஞானசம்பந்தர் சொக்கநாத வெண்பா பாடியருளிய தலம்.
- சற்குரு அருணகிரிநாதர் கூடல் குமரனை கொண்டாடி மகிழ்ந்த தலம்.
- பல அருமை, பெருமைகளையும் கொண்ட மதுரையம்பதி தமிழ் இலக்கியங்களில் முதலிடம் பெற்று மூதூர் என்று போற்றப்படுகிறது.
- சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியங்கள் வரை கொண்டாடி மகிழும் பெரிய திருத்தலம் இம்மதுரை.