Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பகவதி அம்மன்
  ஊர்: பாளையங்கோட்டை
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அமாவாசை, பவுர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  ராகுபகவானுக்கு செய்யப்படும் எல்லா அபிஷேகங்களையும் எந்தவித வேறுபாடுமின்றி பக்தர்களே வரிசையில் நின்று தாங்களாகவே செய்வது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  பகவதி அம்மன், கருமாரி அம்மன், ராகுபகவான், சுடலை மாடசாமி ஆகியோர் கிரசுகளில் சிவப்பு கயிறு வைக்கப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  துர் தேவதைகளால் பயம், விபத்து, நோய் நொடிகள் வராமல் தடுக்கவும், ராகுவால் ஏற்படும் தோஷம் நீங்கி நன்மை பெறவும் பக்தர்கள் இங்குள்ள அம்மனை பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு பொங்கல் நைவேத்தியம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ராகுவுக்கு உரிய தலம் என்றதும் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரமே, பலருக்கும் நினைவுக்கு வரும். அதேபோன்று ராகு தோஷ நிவர்த்தி தலம் ஒன்று, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ளது. இங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் தான் திருநாகேஸ்வரத்தில் உள்ளது போல் நாகவள்ளி, நாக கன்னி தேவி சமேதராக காட்சியளிக்கிறார் ராகுபகவான். திருநாகேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சக்திவாய்ந்த ராகு யந்திரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால வேளையில் ராகு தோஷம் நிவர்த்தியாகிட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும் பாலை நோய் நிவாரணம் வேண்டியும், மகப்பேறு கிட்டவும் அருந்துகின்றனர். ராகுபகவானுக்கு செய்யப்படும் பால் முதலிய எல்லா அபிஷேகங்களையும் எந்தவித வேறுபாடுமின்றி பக்தர்கள் வரிசையில் நின்று தாங்களாகவே செய்கின்றனர். அர்ச்சனை வழிபாடு கற்பூர ஆராதனையும் பக்தர்களே செய்கின்றனர். அவரவர் கொண்டு வந்த பிரசாதத்தை அவரவரே ராகுபகவானுக்குப் படைத்து பின் தங்கள் கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். ராகுபகவானுக்கு உரிய அதி தேவதையான துர்க்கையின் அம்சமாக கருமாரி அம்மன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இருமடங்கு விரைவாக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்கின்றனர். திருக்கோயிலில் உள்ள பகவதி அம்மன், கருமாரி அம்மன், ராகுபகவான், சுடலை மாடசாமி ஆகியோர் கிரசுகளில் சிவப்பு கயிறு வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கயிறு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி தோறும் மாற்றப்படுகிறது. நாற்பத்தெட்டு நாட்கள் அம்மன் சிரசில் வைக்கப்பட்டபின், காவல் தெய்வமான சுடலை மாடசாமி கிரசில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்கின்றனர். இக்கயிறு, துர் தேவதைகளால் பயம், விபத்து, நோய் நொடிகள் ஏற்படாமல் ரட்சையாகக் காக்கும் என்று நம்புகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  ராகு ஒருவரை சாதகமாக இருந்து குபேர புரிக்கும் அழைத்துச் செல்வார். பாதகமாக இருந்தால் கொடூரமான பயன்களையும் அளிப்பார். ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் ராகு இருப்பதால் திருமணம் தாமதமாகும். ஐந்தாமிடத்தில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். எட்டாமிட ராகு பகவான் வேலையில்லாத் திண்டாட்டம், ஒற்றுமைக் குறைவு போன்ற பிரச்சனைகளை உருவாக்குவார். இவற்றுக்கெல்லாம் தீர்வு, அதிதேவதையான துர்க்கையை வணங்குவதுதான். துர்க்கையின் அம்சமான கருமாரி, காளி போன்ற தெய்வங்களை பூஜிப்பதும், ராகுவை உரிய முறையில் வணங்குவதும்கூட நற்பலன் தரும்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ராகுபகவானுக்கு செய்யப்படும் எல்லா அபிஷேகங்களையும் எந்தவித வேறுபாடுமின்றி பக்தர்களே வரிசையில் நின்று தாங்களாகவே செய்வது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar