Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுயம்புநாதர்
  அம்மன்/தாயார்: பிரம்பசக்தி
  தல விருட்சம்: கடம்பமரம்
  தீர்த்தம்: தெப்பகுளம்
  புராண பெயர்: வீரைவளநாடு
  ஊர்: உவரி
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி விசாகம் (3 நாள்) - மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல் - 3 லட்சம் பேர் கூடுவர். தைப்பூசம் - 1 நாள். ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் இக்கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வெள்ளமாக கூடுவர். தவிர வைகாசி விசாகம், தைபூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகியவை இத்தலத்து விழாக்களாகும். தவிர பௌர்ணமி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தமிழ் மாதப்பிறப்பு தைப்பூசம் பிரதோசம் தீபாவளி, பொங்கல், ஆகிய நாட்களில் கோயிலில் விசேச பூஜைகளும் அபிசேக ஆராதனைகளும் நடக்கும். அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மார்கழி மாதம் முழுக்க 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில், உவரி - 628 658, திருநெல்வேலி மாவட்டம்  
   
போன்:
   
  +91 99625 69495, 93847 28151, 94437 22885 
    
 பொது தகவல்:
     
  பனையும் தென்னையும் பாக்கும் வாழையும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை கிராமத்தில்தான் இந்த உவரி கோயில் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  எந்த நோயாக இருந்தாலும் 41 நாள் கடல் நீராடி சுயம்புலிங்க நாதரை தொழுதால் தீருகிறது. நொண்டிகள், கூன், குருடு, மனநோயாளிகள், பில்லி, சூன்யம், பேய் பிசாசு பிடித்தவர்கள் அகியோரது பிரச்னைகள் இங்குள்ள சுயம்புலிங்கநாரை வழிபட்டால் தீருகிறது.

கல்யாண வரம், குழந்தைபாக்கியம் வேண்டுவோர் இத்தலத்து ஈசனை வணங்கினால் அந்த வரங்கள் கிடைத்து வருவது இத்தலத்து பக்தர்கள் காலம் காலமாக பார்த்து வரும் உண்மை.

மனஅமைதி இழந்து தவிப்போர் இத்தலத்துக்கு வந்தால் மனநிம்மதி கிடைக்கும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து போட்டு வழிபடுதல் இங்கு விசேஷமான வழிபாடாக உள்ளது. நாகர் அடித்து வைப்பார்கள். 
    
 தலபெருமை:
     
  இறைவனின் சிறப்புடைய 25 மூர்த்தங்களில் ஒன்று லிங்கோத்பவர். இங்கே இறைவன் சுயம்பு லிங்கோத்பவராக உள்ளார்.

சூரிய அபிசேகம் : சூரியன் தன் பொற்கரங்களால் இறைவனை இத்தலத்தில் ஆராதிப்பதே தனி அழகு என்று சொல்லலாம். மார்கழி மாதம் 30 நாளும் சுயம்பு லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும். வேறு சில ஆலயங்களில் இது போல் சூரிய ஒளி லிங்கத்தின் மேல் விழுவதுண்டு என்றாலும் அங்கெல்லாம் ஒருநாள் இருநாள் மட்டுமே விழும். மாதத்தின் முப்பது நாளும் முழுமையாக சிவலிங்கத்தின் மீது மேல் சூரிய ஒளிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான்.

இயற்கையே இறைவனுக்குக் கவரி வீசுவது உவரியில்தான்.

கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம். மனமுருக வழிபட்டால் வயிற்று வலி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நோய்குணமாகிறது. இந்த கடற்கரைக்கோயிலுக்கு ஒருமுறை சென்றவர்கள் மிகுந்த மனநிம்மதியோடு திரும்பி வருவார்கள். சுற்றுலாப்பயணிகள் வந்து போகுமளவுக்கு சிறப்புடைய அழகிய கோயில்.
 
     
  தல வரலாறு:
     
  அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது ரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீராக தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் சொல்ல பனை ஓலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

‘சுயம்பு’ என்றால் ‘தானாகத் தோன்றுவது’. சுவாமிக்கும் சுயம்புலிங்கநாதர் என்று பெயர் சூட்டப்பட்டது. அம்பாளை பிரம்மசக்தி என்பர்.இதையடுத்து, பக்தர்கள் ஏராளமாக அங்கு வர ஆரம்பித்தனர். அவர்களது வேண்டுதல்கள் பலிக்க ஆரம்பித்தன. இதையடுத்து பெரிய கோயில் உருவானது. இவ்வூரை ‘வீரைவளநாடு’ என்றும் அழைப்பர்.

கோபுர திருப்பணி: இந்தக் கோயிலில், 108 அடி உயரத்திற்கு, ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் திருப்பணி நடந்து வருகிறது. கோபுர தரிசனமே கோடி நன்மை என்னும் போது, கோபுரம் கட்டும் பணியில்ஈடுபட்டால் மிகுந்தபுண்ணியம் கிடைக்கும்என்பதில் சந்தேகமில்லை.

திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர் 99625 69495, 93847 28151, 94437 22885 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மார்கழி மாதம் முழுக்க 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar