காரிய ஐய்யனாரின் இடது பக்கம் சீதேவியும், வலது பக்கம் பூதேவியுடன் கிழக்குப் பக்கம் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். பலி பீடம் உள்ளது. நுழைவு வாயில் வலப்பக்கம் சப்த கன்னிகள் தனி சன்னதியிலும், எதிரில் குதிரையுடன் காவளாளி முன்னடியான் நிற்பதுடன், அவர் அருகில் தல விருட்சத்துடன் வீரன் அருள்பாலிக்கிறார்கள்.
பிரார்த்தனை
நினைத்த காரியம் கை கூடவும், விவசாயம் செழிக்கவும், வேலை வாய்ப்பு வெற்றி பெறவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது தானியத்தில் பொங்கலிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
அரசலாற்று பாசன வயல் சூழ்ந்த நடுவில் கோயில் கிழக்குப்பக்கம் ஒரு கலசத்துடன் கற்பகிரகம் அமைந்துள்ளது. நினைத்த காரியம் கை கூடும் என்பதால் காரிய ஐய்யனார் என அழைக்கப்படுகிறார்கள். பழங்காலத்தில் அதிகளவில் கொத்தர் என்ற சமூகத்தினர்கள் வாழ்ந்ததால் அதன் காரணமாக பின்னாளில் கொத்தவாசல் என மறுவியுள்ளது.
தல வரலாறு:
300 ஆண்டுள் பழமையானது. 2013ல் புது கட்டடங்கள் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கற்பகிரகத்தில் ஒரு கலசம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வயல் சூழ்ந்தப்பகுதியானதால் இரவு நேரத்தில் திருட்டு நடந்துள்ளது. அதனால் காவல்தெய்வமாக அய்யனார் இருந்துள்ளார். திருட்டு பயம் போக்கிய பகுதியாக இருந்துள்ளது. விவசாயம் செழிக்க அப்பகுதியினர் வேண்டுதல் செய்கிறார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பொதுவாக ஐய்யனார் கோயில்களில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால் இங்கு புது தானியத்தில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம் : திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தெற்கு திருவாரூர் சாலையில் ஒன்பது புள்ளி வழியாக சென்றால் கிழக்கே 1 கி.மீ.,தொ லைவில் வயல் சூழ்ந்தப்பகுதியில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
பூந்தோட்டம் , திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி, சென்னை.
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538.