இயற்கை காலங்களில் பேரிடரை பாதுகாப்பிற்காக அரசர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில் அப்பகுதியினர் தஞ்சம் அடைந்ததால் வெள்ள மண்டபம் என பெயர் வந்துள்ளது. மூன்று பக்கமும் நீரோட்டம், எதிரில் தலவிருட்சமான வேம்பு உள்ளது. 100 பேர் அமரும் வகையில் இடவசதி, கிழக்குப் பக்கம் பார்த்து அம்மன் அருள்பாலிக்கின்றார். மகாமண்டபத்தில் வலது பக்கம் விநாயகர், இடபக்கம் பாலமுருகன் கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். உற்சவரான ஒரு கலசத்துடன் கூடிய சன்னிதியில் மூலவரான மகா காளியம்மன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். உற்சவரான மகா காளியம்மன் அமர்ந்து செல்லும் சிங்க வாகனம் உள்ளது. வடக்குப்பக்கம் மேல் பகுதியில் கோயில் மணி உள்ளது. நுழைவு வாயில் பலி பீடம் மற்றும் சூலாயுதம் உள்ளது. 500 ஆண்டுகள் முற்பட்டதாக கூறப்படுகிறது. 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பிரார்த்தனை
புத்திரபாக்கியம், திருமணத்தடை, பலருக்கும் குல தெய்வாக உள்ளது. மேலும் சித்திரை மாத பூஜை சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள், புதிய தானியங்கள் ஆடு, கோழி மற்றும் புறா போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றன.
தலபெருமை:
பல்வேறு பகுதியில் இருந்து குலதெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர். பழுதடைந்த கோயிலை ஓய்வு பெற்ற வனத்துறை ரேஞ்சர் ஒருவர் முயற்சியால் நிதி வசூலித்து கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கும் மேற்குபக்கம் முனிஸ்வரன், வடக்கே பிரமாணியர், தெற்கே வேலூர் மகாமாரியம்மன், கிழக்கே அரிச்சந்திரா பிள்ளையார் கோயிலும் இருப்பது இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
தல வரலாறு:
சோழவளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூக்கும் வட மேற்கே 20 கி.மீ.,தொலைவில் கும்பகோணம்-நன்னிலம் சாலையில் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. பழங்காலத்தில் கிராமத்தில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது அப்பகுதினர், வேறு வழியில்லாமல் இறைவனிடம் முறையிட்டு கதறினர். அப்போது அப்பகுதியில் வயதான மூதாட்டி போன்ற ஒருவர் வந்து கவலைப்படாதீர்கள் உயிர் பலி ஏற்படாது, உங்கள் பஞ்சம் தீர விரைவில் தேவையான பொருட்கள் வந்து சேரும் என அசரீரியா கூறி மறைந்தார். சற்று நேரத்தில் சோழமன்னர்கள் மாட்டு வண்டி மூலம் நெல் மற்றும் அரிசி மற்றும் உணவுப்பொட்டலங்கள் மற்றும் தானியங்களை வழங்கியுள்ளார். அதன் பின் அப்பகுதியினர் மகா காளியம்மனுக்கு சிறு கொட்டகை அமைத்து வழிபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த பலர் வெளியூர்களில் உள்ளதால் முக்கிய விசேஷ தினத்தில் குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அம்மன் விக்கிரகத்திற்கு பால் உள்ளிட்ட திரவ அபிஷேகம் செய்யப்படுகிறது.
இருப்பிடம் : நன்னிலத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 8 கி.மீ., தொலைவில் வெள்ள மண்டபம் பாலத்தில் இறங்கினால் அருகில் கோயில் உள்ளது. திருவாரூரில் இருந்து 20 கி.மீ., தொலைவு.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி :
திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020