Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காசிவிஸ்வநாதர்
  அம்மன்/தாயார்: விசாலாட்சி
  தல விருட்சம்: வில்வமரம்
  ஊர்: கீழ ஆம்பூர்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலை சுற்றி பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில், திரிசூல மலையில் கோரக்கநாதர் கோயில், ராமநதி அணை அருகில் வில்வவனநாதர் கோயில், திருவாலீஸ்வரம், கடனா நதி, ராமநதி, தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ஆகிய பஞ்ச மூர்த்தி ஸ்தலங்கள் உள்ளன.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் கீழ ஆம்பூர், திருநெல்வேலி மாவட்டம்.  
   
போன்:
   
  +91 98946 48170, 94420 27013, 99420 16043. 
    
 பொது தகவல்:
     
  காசிவிஸ்வநாதர் கிழக்கு நோக்கி உள்ளார். கன்னிமூலை விநாயகர், பூர்ண புஷ்கலா சமேத அய்யனார், திருக்கல்யாண முருகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. ஈசான மூலையில் அபிஷேகத்திற்கு கிணறு தீர்த்தம் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  கோயிலில் தெற்கு முகமாக அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி அரளிப்பூ மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயிலில் தெற்கு முகமாக அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி அரளிப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் விபத்து, நோயில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்காக அம்பாளை வேண்டிக் கொண்டால் குடும்ப உறுப்பினராக அம்மன் இருந்து காப்பதாக நம்பிக்கையுள்ளது.  
     
  தல வரலாறு:
     
  கீழஆம்பூரைச் சேர்ந்த காசிவிஸ்வநாத பிள்ளை, விசாலாட்சி தம்பதியின் மகன் மதனராஜன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ராஜாங்கம் மற்றும் பாண்டித்துரை உட்பட எட்டு ஆண்களும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். நாளடைவில் ராஜாங்கமும், பாண்டிதுரையும் வசதி வாய்ப்பை இழந்து, திரிசூல மலையில் விறகு வெட்டி குடும்பம் கழித்தனர். ஒரு ஆவணி மாதத்தில் விறகு வெட்டச் சென்றவர்கள், அத்தியூத்து கரை அருகிலுள்ள ஆலமரத்தடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது. வருத்தப்பட்ட சகோதரர்கள், நம்முன்னோர் காசி சென்று தானம், தர்மம் செய்தனர், ஆனால் நாம் மழையில் கஷ்டப்படுகிறோம், எங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்காதா? என்று சிவபெருமானை வேண்டினர். அந்நேரத்தில் ஆலமரம் சாய்ந்து பூமி அதிர்ந்தது. ஆனால், அந்த இடத்தில், சலங்கை ஒலி ஒலிக்க, பூமியிலிருந்து மேல் நோக்கி ஒரு சிவலிங்கம் வந்தது. மின்னல் ஒளி லிங்கத்தின் மேல் விழுந்தது. லிங்கத்திலிருந்து சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி சகோதரர்களுக்கு காட்சி அளித்தனர். உங்கள் கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும், தைரியமாக இருங்கள், என்று கூறி மறைந்தனர்.  உடனே ஏழு செப்பு அண்டாக்கள் பூமியிலிருந்து மேலே வந்தன. அவற்றில் பொற்காசுகள் இருந்தன. பொற்காசுகளுடன் சிவலிங்கத்தையும் ஊருக்கு கொண்டு வந்து கோயில் கட்டி வழிபட்டனர். முன்னோர் நினைவாக காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்று சுவாமி அம்பாளுக்கு பெயர் சூட்டினர். அந்த ஊருக்கு சிநேகபுரி என பெயரிட்டனர். பிறகு அன்பு நகர் என்றாகி தற்போது ஆம்பூர் எனப்படுகிறது. ஆம்பு என்றால் காஞ்சோன்றி என்னும் செடி வகையைக் குறிக்கும். இந்த செடிகள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் இருந்ததால் ஆம்பூர் என பெயர் வந்திருக்கலாம்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலை சுற்றி பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில், திரிசூல மலையில் கோரக்கநாதர் கோயில், ராமநதி அணை அருகில் வில்வவனநாதர் கோயில், திருவாலீஸ்வரம், கடனா நதி, ராமநதி, தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ஆகிய பஞ்ச மூர்த்தி ஸ்தலங்கள் உள்ளன.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar