Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராமநாதர்
  ஊர்: காஞ்சிபுரம்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி, சதுர்த்தி  
     
 தல சிறப்பு:
     
  தமிழகத்தின் வடக்கு ராமேஸ்வரமாக இது கருதப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம்.  
   
போன்:
   
  +91 99942 93391 
 
பிரார்த்தனை
    
  வேலையில்லாதவர்களும், வேலை, பதவியை இழந்தவர்களும் நிவாரணம் பெற, பிதுர் தோஷம் நீங்கவும் இத்தலத்தில்  பக்தர்கள் வழிபடுகிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

கல்வி கணபதி: இக்கோயிலில் சிவன் வழிபட்ட வல்லபகணபதி வீற்றிருக்கிறார். முதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே எச்செயலையும் தொடங்கவேண்டும் என்னும் நியதியை ஏற்படுத்திய சிவனே, ஒருமுறை அதைப் பின்பற்றவில்லை. திரிபுரசம்ஹாரத்தின் போது சிவன், விநாயகரை தியானிக்காமல், தேரில் புறப்பட்டார். இதைக் கண்டவிநாயகர், தேரின் அச்சினை முறியச் செய்து தடுத்தார். தன் தவறுக்காக வருந்திய சிவன், இந்த விநாயகரை வழிபட்டார். அவரே வல்லபகணபதியாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். இப்பெருமான் செங்கதிர் நிறமும், சர்ப்ப ஆபரணமும், மகுடம், கேயூரம் ஆகிய அணிகலன்களும், பத்து கைகளுடனும், பழம், கரும்பு, நெற் கதிர், தந்தம் ஏந்தியும் காட்சியளிக்கிறார். வேலையில்லாதவர்களும், வேலை, பதவியை இழந்தவர்களும் நிவாரணம் பெற இவரை வணங்குகின்றனர். பிரதோஷம், பவுர்ணமி, சதுர்த்தி தினங்களில் இந்த வழிபாடு விசேஷம்.

காஞ்சிப்பெரியவர் வருகை: இங்குள்ள முக்தி மண்டபத்திற்கு காஞ்சிப்பெரியவர் பலமுறை வருகை தந்துள்ளார். இங்கிருந்து சீடர்களுக்கு வேதம் கற்பித்திருக்கிறார். சிதிலமடைந்திருந்த இக்கோயில் பெரியவரின் அருளாசியின்படி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சிகாமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள முக்தி மண்டபம் சிறப்பு மிக்கது. பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

 
     
  தல வரலாறு:
     
  தசரத குமாரரான ராமர் வனவாசம் சென்ற காலத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான். ஆஞ்சநேயர் உதவியுடன் ராமர் சேதுக்கரையில் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்றார். ராவணனை வதம் செய்து சீதையை மீட்டார். சிவபக்தனான ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்தார். அப்போது காட்சிஅளித்த சிவன், மோட்சபுரிகளில் ஒன்றான காஞ்சியிலும் தன்னை வணங்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி, ராமர் காஞ்சிபுரத்தில் வழிபட்ட தலம் இது. ராமரின் பெயரால் சுவாமிக்கு ராமநாதர் என்று பெயர் வந்தது. இவரை தேவர்கள், பூதகணங்கள் மட்டுமின்றி, மிருகங்கள், பறவைகள், ஊர்வன போன்ற உயிர்களும் வணங்கி முக்திபெற்றனர். ராமேஸ்வரத்திற்குரிய புனிதமும் பெருமையும் இத்தலத்திற்கும் உண்டு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தமிழகத்தின் வடக்கு ராமேஸ்வரமாக இது கருதப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar