ஆலய திருச்சுற்றில் விநாயகர், வள்ளி, தெய்வானை உடனாகிய முருக பெருமாள் மேற்பால் அருளாட்சி செய்கின்றனர். ஈசான பாகத்தில் நவ கோலங்களும். பைரவரும் அமைந்திருக்கின்றனர். தனியாக சனீஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக கருவறை சுற்றில் தென்பால் விநாயகரும், தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அமைந்திருக்கின்றனர். இங்கு தண்டேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. புதிதாக ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுர உள்புறம் தென்பால் தனி விநாயகர் சன்னதி அமைய பெற்றுள்ளது.
பிரார்த்தனை
தீராத நோய்கள் தீர, தொழில் அபிவிருத்தி, சந்தன பாக்கியம் பெற இங்கு ஒரு மண்டலம் வழிபட்டால் நல்ல பலன் கிடைப்பது இத்தலத்தின் பெரும் சிறப்பாகும்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
காமிக, காரண ஆகமங்களின்படி இக்கோவில் அமையப் பெற்றுள்ளது. கருவறை அந்தராளம், அர்த்த மண்டபம், முக மண்டபம் போன்ற மண்டப அமைப்புக்கள் அமைந்துள்ளன. இங்குள்ள சிவன் சன்னதி கிழக்குப் பார்த்த நிலையில் அமைந்துள்ளது. மூலவர் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். வட்ட வடிவ ஆவுடையார் கொண்டது. இறைவடன் ஆனந்தத்தை அள்ளி வழங்கும் தாயார் ஆனந்தவள்ளி அம்பாள் தெற்கு நோக்கி அருளுகின்றாள். அம்பாள் கருவறையில் பாச அங்குசம், மேற் கைகளில் ஏந்தி மற்ற திருக்கரங்களால் அபய வரதம் காட்டிய தாய் அழைப்பது போன்று பக்தர்களை அழைக்கும் வடிவழகோடு நின்ற திருகோலத்தில் அருள் பாலிக்கிறாள்.
இத்திருக்கோயிலை சுற்றிலும் சப்தகன்னியர்களுக்கு கோயில் அமைந்துள்ளது. இத்தலத்துடன் இணைந்து ஆலவட்டம்மன், அடஞ்சியம்மன் என்று அழைக்கப்படும் கெங்கையம்மன், பச்சையம்மன் திருக்கோயில்கள் உள்ளன.
தல வரலாறு:
காஞ்சி மாநகருக்கு கீழ் திசையில் அமைந்துள்ள குன்றத்தூரை அடுத்து அமைத்துள்ளது அனகாபுத்தூர் என்னும் திருநகரமாகும். இதன் தென்னாம பெயர் ஆனைகா புத்தூர் ஆகும். அதாவது யானைகளை பராமரித்து பாதுகாத்து வந்த இடமாகும். பல்லவன் காலத்தில் இவ்விடம் யானைகள் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும், இவ்வூர் அருகே அடையாறும், அதனை சார்ந்த மடுவும் யானைகளை பாதுகாக்கப்பட்டு உகந்ததாய் இருந்துள்ளது. இறைவன், பார்வதியை திருமணம் செய்த காலத்தில் தென் கோடியாகிய தென்னாடு உயர்ந்தது. வடகோடியாகிய இமயம் தாழ்ந்ததாம். அதனை சமன் செய்ய இறைவன், அகத்திய மாமுனியை தென்னாடு அனுப்பினார். சிவனை ஆராதிக்கும் வழக்கமுடைய அகத்தியர் தொன்னாடு அடைந்த போது, பல இடங்களிலும் தங்கி சிவ பூஜை செய்துள்ளார்.அதன்படி இவ்வூரிலும் அகத்தியர் பூஜை செய்துள்ளார். அதனாலேயே இவ்வூர் இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. எனவே இது அகத்திய முனிவர் பூஜித்த தலமாகும். மேலும், பாண்டவர்கள் வனவாசத்தின் போதும், தீர்த்த யாத்திரை செய்த போதும், தென்னாட்டில் பல இடங்களில் தங்கி இறைவனை பூஜித்துள்ளனர். அவ்வாறு அவர்கள் பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இவ்வூரில் பாதுகாக்கப்பட்டு வந்த சில யானைகள் அருகிலுள்ள மடுவின் நீரை முகந்து அபிஷேவித்தும், மடுவின் கரையில் அமைந்த நந்தவனமான மலர்களை தூவியும் அர்ச்சித்து பெயர் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. எனவே, யானை பூஜித்த தலைவன் இறைவன் உறையும் இவ்வூர் ஆனைகாபுத்தூர் என்று அழைக்கப்பட்டு, தற்காலத்து அனகாபுத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பிடம் : சென்னை பல்லாவரம் - குன்றத்தூர் - மாங்காடு செல்லும் வழியில் பிரதான ஜி.எஸ்.டி; சாலையில் இருந்து சுமார் 7 கி.மீ.,தூரத்தில் உள்ளது அனகாபுத்தூர்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
தாம்பரம், சென்னை
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :
சென்னை
தாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101 தி பார்க் போன்: +91-44-4214 4000 கன்னிமாரா போன்: +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525 அசோகா போன்: +91-44-2855 3413 குரு போன்: +91-44-2855 4060 காஞ்சி போன்: +91-44-2827 1100 ஷெரிமனி போன்: +91-44-2860 4401, 2860 4403 அபிராமி போன்: +91-44-2819 4547, 2819 2784 கிங்ஸ் போன்: +91-44-2819 1471 சன் பார்க் போன்: +91-44-4263 2060, 4264 2060