Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்துமாரியம்மன்
  தல விருட்சம்: அரசு-வேம்பு
  ஊர்: அடையாறு
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடிப்பூரம், சித்ரா பவுர்ணமி பாற்குட வைபவம். நவராத்திரிவிழா, மார்கழி மாத பூஜை, விநாயகர் சதுர்த்தி.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலில் பதி விளக்கு ஏற்றுவது சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அடையாறு, சென்னை.  
   
    
 பொது தகவல்:
     
  துர்கைக்கும் சப்த கன்னிமார்களுக்கும் இங்கு தனிச் சன்னதி உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வாழ்வில் மகத்தான திருப்பங்கள் நிகழ இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

ஆடித் திருவிழா இங்கு அமர்க்களமாக நடந்தேறும், ஆடி மாதம் துவங்குவதற்கு முன்னதாக வரும் திங்கட்கிழமையில், அதிகாலை வேளையில் பந்தக்கால் நட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெறும் .பிறகு ஆடி முதல் வெள்ளியன்று கணபதி ஹோமம் வளர்த்து பூஜைகள் முடிந்ததும் காப்புக் கட்டி சுப தருணத்தில் பதி விளக்கு ஏற்றுகிறார்கள் இது, இந்தக் கோயிலின் சிறப்பம்சம். விளக்கு ஒன்றில் தீபம் ஏற்றி, அதைச் சிம்ம வாகனத்தில் வைத்து அம்மனிடம் உத்தரவு பெறுவார்கள். இந்தத் தலத்தில் உனக்குத் திருவிழா நடத்தப் போகிறோம் நடத்தலாமா? கூழு ஊத்துவதற்கு உன் அனுமதி வேண்டும்என, பிரகாசமாக எரியும் அந்த விளக்கு ஜோதியின் மூலம் அம்மனிடம் அனுமதி கேட்கிறார்கள்.

அம்மன் உத்தரவு கிடைத்ததும், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். அன்றைய தினமே ஊர் எல்லையில் உள்ள பெரிய பாளையத்து அம்மன் கோயிலில் இருந்து கும்டீம் வைத்து, சக்தி கிரகம் எடுத்து வருவார்கள். மறுநாள், சனிக்கிழமை அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து, அம்மனின் வரலாற்றை கோயில் பூசாரிகள் கதையாகச் சொல்வார்கள். ஞாயிறன்று கூழ்வார்க்கும் வைபவம், அதைத் தொடர்ந்து அம்மனின் திருவீதியுலா நடைபெறுகிறது.

ஆடி வெள்ளிகளில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தரும் அம்மனைத் தரிசிக்கக் கண்ணிரண்டு போதாது! ஆடி மாதம் 4-வது வெள்ளியும், தை மாதம் 4-வது வெள்ளியும், கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. விழா துவக்கத்தில் பதி பூஜையில் எலுமிச்சைப் பழம் சமர்ப்பிப்பார்கள். பிறகு ஞாயிறன்று கும்பம் கலைக்கும் தருணத்தில், குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு அந்தப் பழங்கள் பிரசாதமாகத் தரப்படும். அதை வாங்கிச் செல்லும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோன்று, கல்யாணம் தடைப்படும் அன்பர்களுக்கு இங்கே மஞ்சள் கயிறுக கட்டுகிறார்கள். இதனால் வெகு சீக்கிரமே கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆடிப்பூரமும் இங்கே விசேஷம்! அன்று சுமங்கலிகளுக்கு திருமாங்கல்யக் கயிறு, வளையல், குங்குமம், சீப்பு, கண்ணாடி என ஐந்து வகை பிரசாதங்கள் தரப்படுகின்றன.

 
     
  தல வரலாறு:
     
 

கி.பி 1967 ல் இந்தப் பகுதியில் வசித்த மூதாட்டிகள் சிலரின் முயற்சியால். சிறிய ஓலைக்கொட்டகையில் குடியேறினாளாம் அம்மன் பிற்காலத்தில் தான் கோயில் வளர்ச்சியடந்தது என்கிறார்கள்.

அம்மன் விக்கிரகம் இங்கு வருவதற்கு முன்பாக, இந்த இடத்தில் ஸ்ரீராஜகணபதி, எனும் பிள்ளையார் விக்கிரகம்தான் இருந்தது. இந்த ஊரின் ஆரம்பமே அவர்தான் என்கிறார்கள் பக்தர்கள். ஆடிமாதம் அம்மனை வழிபடுவதில் அதீத விருப்பம் கொண்டவர்கள் இந்தப் பகுதி மக்கள். எனினும் அப்போது சுற்று வட்டாரப் பகுதியில் அம்மன் கோயில்களே கிடையாது. அதன் விளைவாகவே அம்மன் விக்கிரகத்தை இங்கே கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்களாம்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் பதி விளக்கு ஏற்றுவது சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar