இங்கு பசுபதீஸ்வரர், சித்தி விநாயகர், சிவசுப்ரமணியர், சுந்தர வரதராஜ பெருமாள், கனகவல்லித் தாயார், பிரத்தியங்கிராதேவி மற்றும் வள்ளலார் ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வடமாலை - வெற்றிலை சாற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ஸ்ரீராமபிரான் சீதாதேவி, லட்சுமணருடன் சன்னதி கொண்டிருக்க, அவர்களை வணங்கியபடி அஞ்சலி ஹஸ்தத்துடன் மிக அற்புதமாகத் தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர்.
தல வரலாறு:
சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. ஞானமும் செல்வமும் தருகிற திருத்தலம் என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. பாகவதபுரம் எனும் ஊரில் அவதரித்த ஞானச்சேரி ஞானிகள் சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர், சிறு வயதில் அங்கிருந்த ஆலயத்தில் இறைப் பணிகளைச் செய்து வந்தார். அப்போதே அதேபோன்று தானும் ஓர் ஆலயம் கட்டவேண்டும் என ஆவல் கொண்டாராம். அதன்படி, 95-ஆம் வருடம், திருவெளிச்சை கிராமத்தில் பசுபதீஸ்வரர், சுந்தர வரதராஜ பெருமாள் ஆகியோருக்குக் கோயில் எழுப்பினார் என்கிறது ஸ்தல வரலாறு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.
இருப்பிடம் : சென்னை-வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் மலை ஆஞ்சநேயர் கோயிலைத் தரிசிக்கலாம். அருகிலேயே வலப்புறமாக ஒரு சாலை பிரிகிறது. இதில் சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால், திருவெளிச்சை கிராமத்தை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
தாம்பரம், சென்னை
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :
சென்னை
தாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101 தி பார்க் போன்: +91-44-4214 4000 கன்னிமாரா போன்: +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525 அசோகா போன்: +91-44-2855 3413 குரு போன்: +91-44-2855 4060 காஞ்சி போன்: +91-44-2827 1100 ஷெரிமனி போன்: +91-44-2860 4401, 2860 4403 அபிராமி போன்: +91-44-2819 4547, 2819 2784 கிங்ஸ் போன்: +91-44-2819 1471 சன் பார்க் போன்: +91-44-4263 2060, 4264 2060