பக்தர்கள் இங்குள்ள மூலவரை வேண்டினால், தடைப்பட்ட காரியங்கள் யாவும் வெற்றியாகும், திருமணம், குழந்தைபேறு, வேலைவாய்ப்பு வேண்டியவர்களுக்கு வேண்டுதல் உடனே நிறைவேறும், என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோ தானம், துலாபாரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
தலபெருமை:
300 ஆண்டுகள் பழமையான கோயில். தினமும் மூன்றுகால பூஜையுடன் கோ பூஜையும் நடக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த இக்கோயிலில் காலடி வைத்தால் மனதில் அமைதி நிலவும்.
தல வரலாறு:
சாப்டூர் ஜமீனில் திவானாக இருந்த கண்டியதேவனால் கட்டப்பட்டது. அவரது பெயரால் இந்த ஊர் அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தினமும் மூன்றுகால பூஜையுடன் கோ பூஜை நடப்பது சிறப்பு.
இருப்பிடம் : மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் டி.கல்லுப்பட்டி அருகே கண்டிதேவன்பட்டியில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.